இமாம் ஹஸனுல் பன்னா மாணவனுக்கு எழுதிய கடிதம்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1935-ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கு நாடொன்றுக்கு கல்வி தேடி தனது மனைவியுடன் சென்ற ஓர் இஸ்லாமிய மாணவனுக்கு இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் பயனுள்ள உபதேசங்களைக் கொண்ட ஒரு கடிதமொன்றை எழுதினார்கள். இந்தக் கடிதம் இன்றைக்கும் நம் போன்றவர்களுக்கும் பொருந்துமே என்ற நிதர்சன உண்மையின் கீழ் இக்கடிதத்தை பிரசுரிக்கிறோம்.

நல்ல எண்ணத்துடனும் உயர்ந்த நோக்கத்துடனும் பிரயாணத்தை மேற்கொள்கின்ற உங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

கண்ணியத்திற்குரிய மாணவனே! இன்னும் சற்று நேரத்தில், உக்களுக்கு அறிமுகமில்லாத சமூதத்துக்கு மத்தியிலும், உங்களுக்கு பழக்கமில்லாத மத்தியிலும் இருப்பீர்கள். அவர்கள் உங்களிடத்தில் ஒரு முஸ்லிமுக்குரிய உதாரணத்தைப் பார்ப்பார்கள்.எனவே, நீங்கள் மிகச் சிறந்ததோர் உதாரணமாகத் திகழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்களிடத்தில் பெருமதிமிக்க அடைக்கலப் பொருளொன்று இருக்கிறது. அதுதான் உங்களது மனைவி. அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள். அவளுக்குப் பாதுகாப்பான தோழனாக இருங்கள். அப்போது அவள் உங்களுக்கு மன அமைதியையும் சந்தோசத்தையும் பெற்றுத் தருவாள்.

நான் உங்கள் மீது கொண்ட  அன்பின் காரணமாகவும், உங்களுக்கு சந்தோஷமானதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென எதிர்பார்க்கும் ஒரு தூய்மையான நண்பன் என்ற வகையிலும் இன்னும் சில உபதேசங்களை எழுதுகிறேன். அவற்றையும் வாசியுங்கள்.

உங்களது எல்லா விவகாரங்களையும் செயல்பாடுகளையும் அல்லாஹ் கண்கானித்துக் கொண்டிருக்கின்றான் என்ற நல்லுணர்வோடு அமைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களது எல்லா செயல்பாடுகளையும் அறிந்தவனாகவும், கண்களுக்குப் புலப்படாத உள்ளங்கள் மறைத்து வைத்திருக்கக் கூடிய அனைத்தையும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான். எனவே, அவன் உங்களை எந்தவொரு நிலையிலும் பொருந்திக் கொள்ளக் கூடிய வகையில் காண்பதற்கு முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வால் நிரம்பிய உள்ளத்தை ஷைத்தான் நெருங்கவும் மாட்டான். எனவே, இவ்விஷயத்தில் பொடுபோக்காக இருக்க வேண்டாம்.

உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நேரத்துக்கு நிறைவேற்றி விடுங்கள்.அவற்றைப் பிறகு செய்யலாம் என்றோ, அல்லது காரணங்களை முன்வைத்தோ அதிக வேலைகளினாலோ பிற்படுத்தாதீர்கள். விட்டு விடதீர்கள். ஏனென்றால் அது இச்சையின் உணர்வுகள். அல்லாஹ் கூறுகின்றான்;

“மனோ இச்சையைப் பின்பற்ற வேண்டாம். அவ்வாறாயின் அது உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி தவறச் செய்து விடும்.” (ஸாத் : 26)

அல்லாஹ்வை நெருங்கிச் செல்வதற்குரிய மிகச் சிறந்த சாதனமாக அவன் விதியாக்கிய கடமைகளே காணப்படுகின்றன.அதில் குறைவு செய்திட வேண்டாம். நீங்கள் மேற்கத்தேய நாட்டில் இருந்து கொண்டு கஷ்டத்துடன் ஒரு நன்மையைச் செய்வது பன்மடங்கு கூலியைப் பெற்றுத் தரும். நான் இதனைவிட அதிகமாக கடமையான விஷயங்களைப் பற்றிக் கூற விரும்பவில்லை. ஏனென்றால் அதுதான் மூலதனமாகும். மூலதனத்தினை வீணடித்தவனின் கைசேதமான நிலை, நாளை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.

உங்களுக்கு முடியுமான அளவு நேரத்தை சுன்னத்தான காரியங்களை நிறைவேற்றுவதில் கழியுங்கள். ஃபர்ழான தொழுகைக்குரிய சுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்றுங்கள். இஸ்திஃபார் செய்வதை அதிகப்படுத்தி, மகத்தான உங்களது இறைவனையும் துதி செய்யுங்கள். ஒருவன் பிரயாணத்தில் இருக்கும் பொழுது கேட்கும் துஆ பதிலளிக்கப்படக் கூடியது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ்வை அதிகம் நினைவுக் கூறுங்கள். ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், “உமது நாவு அல்லாஹ்வின் நினைவால் நனைந்து கொண்டே இருக்கட்டும்” என அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.

அல்குர்ஆனை விளங்கி ஆராய்ச்சி சிந்தனையுடன் அதிகமாக ஓதி வாருங்கள். அதுதான் உங்களுக்கான நோய் நிவாரணியாகும். உங்களுடைய ஒவ்வொரு நாளையும் அல்குர்ஆனைக் கொண்டே முடியுங்கள். ஏனென்றால், அது சிறந்த ஆரம்பமாகவும் நல்ல முடிவாகவும் உள்ளது.

நீங்கள் அங்கே பலவீனமான உள்ளங்களை மிகைத்து, கண்களை மயக்கி, சிந்தனையை மழுங்கடித்து, உள்ளத்தைத் திசை திருப்பக் கூடிய உலகத்தின் கவர்ச்சிகளையும், மாயைகளையும் காண்பீர்கள்.இவையெல்லாம் உங்களையும் மயக்கி மறுமையையும் மறக்கடிக்காமல் இருக்கட்டும். அல்லாஹ் கூறுகின்றான்:

“(நபியே!) இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். (தாஹா : 131)

எனது மதிப்பிற்குரியவரே! அங்கு இருக்கிறவர்கள் அல்லாஹ் எங்களுக்கு ஹராமாக்கியுள்ளதை ஹலாலாகக் கருதுவர்கள். அந்த ஹராமான அம்சங்களைச் செய்வதில் சற்றேனும் தயக்கம் காட்ட மாட்டார்கள். எனவே, நீங்கள் இச்சைகளுக்கு உடன்பட்டுச் செல்ல வேண்டாம். அவர்கள் செய்யும் பாவங்களில் பங்கு கொள்ளவும் வேண்டாம். நிச்சயமாக அவை உங்களை அல்லாஹ்வின் பிடியிலிருந்து பாதுகாக்க மாட்டாது. மறுமையில் உங்களுக்கு ஆதரவாகவும் இருக்காது.

அடுத்து, நீங்கள் அங்குள்ள பெண்களுடன் தோழமை கொள்ள வேண்டாம். உங்களுக்கும் அவர்களுக்குமிடையில் தனிப்பட்ட நட்பையோ, அல்லது உளரீதியிலான உறவையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இது ஏனையோருக்கு ஒரு குற்றமாக தென்பட்டால், உங்கள் மீது இரண்டு குற்றங்கள் ஏற்படும். ஏனென்றால், அதற்கான விளக்கத்தை அறிந்து வைத்துள்ளீர்கள்.

மதுபானத்தை நெருங்கவும் வேண்டாம். அவ்வாறு நெருங்குவதற்கு சூழலைக் காரணம் காட்டவும் வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் அனைத்து சூழல் காரணிகளையும் அறிந்தே அதனை ஹராமாக்கினான். இவ்வாறே ஹராமான எந்த உணவையும் சுவைக்க வேண்டாம். ஹராமான உணவினால் வளரும் உடம்பு நரகத்திற்கே மிகவும் பொருத்தமாகும். அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றில் கெடுதியைத் தவிர வேறொன்றுமிருக்காது.

“இன்னும் தூய்மையானவற்றை அவர்களுக்கு அவர் (நபியவர்கள்) ஹலாலாக்கி, கெட்டவற்றை அவர்கள் மீது ஹராமாக்கி வைப்பார்.”      (அல்அஃராப் : 157)

இவ்வாறு இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன.தொடர்ந்து உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்க வேண்டுமென விரும்புகிறேன். என்றாலும் அதிகமான பேச்சு சிலவற்றை மறக்கடித்து விடும் என அஞ்சுகிறேன். எனவே, அல்லாஹ் உங்களுக்கு நல்லதை நாட வேண்டும் என பிரார்த்திக்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

கிப்லா மாற்றமும் உலகத் தலைமைத்துவமும்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

கிப்லா மாற்றமும் உலகத் தலைமைத்துவமும்

ரமலானுக்குப் பின் அண்ணலார் மிக அதிகமாக நோன்பு நோற்ற மாதம் ஷஅபான் மாதம். இது இஸ்லாமிய வரலாற்றில் முதன்மையான மற்றொரு நிகழ்வுக்கு சாட்சி வகிக்கும் மாதமும் கூட. பராஅத் இரவு பற்றிய விவாதங்களுக்கிடையே, எல்லோரும் மறந்து போன வரலாற்று நிகழ்வு அது. பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது கொண்டிருந்த முஸ்லிம் சமூகம் அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப மக்காவில் உள்ள கஅபாவை நோக்கித் தொழ ஆரம்பித்தது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷஅபான் மாதம் முதலே ஆகும்.

கிப்லா மாற்றம் என்பது தொழுகையின் சட்ட அம்சங்களுடன் தொடர்புடைய ஒரு பிரச்சினை மட்டுமன்று. தொழுகையின் போது கிப்லாவை நோக்கித் தான் நிற்க வேண்டுமா, கிப்லாவை நோக்கித் திரும்பினால் போதுமா? ஆகியவை எல்லாம் சட்ட நூல்களில் அடி முதல் நுனி வரை அலசி ஆராயப்பட்டுள்ளன என்றாலும் கிப்லா மாற்றம் தொடர்பான வரலாற்று ஆய்வுகளை அதிகம் காண முடிவதில்லை. கஅபாவை கிப்லாவாக நிர்ணயிப்பதற்கு முன் முஸ்லிம்கள் பாலஸ்தீனத்தில் உள்ள பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது கொண்டிருந்தனர். ஓரிறைக் கோட்பாட்டின் அடையாளச் சின்னமாக எல்லாக் காலத்திலும் திகழ்ந்த கஅபாவிற்கு பதிலாக, துவக்கத்தில் பைத்துல் முகத்தஸை கிப்லாவாக நிர்ணயம் செய்ததற்கான காரணம் என்ன?

அதைக் குறித்து குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள் : “(இதற்கு முன்பு) எந்தத் திசையை நோக்கி நீர் தொழுது வந்தீரோ, அதனைக் கிப்லாவாக நாம் ஆக்கி வைத்திருந்ததெல்லாம் யார் இறைத்தூதரைப் பின்பற்றுகிறார்கள்; யார் மாறிச் சென்று விடுகிறார்கள் என்பதை நாம் அறிவதற்காகத்தான்! இது (கிப்லா மாற்றம் மிக்க கடினமாகவே இருந்தது. ஆனால் அல்லாஹ் காட்டிய நேர்வழியைப் பெற்றிருந்தவர்களுக்கு அது சிறிதும் கடினமாக இருக்க வில்லை.” (2:143)

அரேபியர்கள் குருட்டுத்தனமான ஒரு சார்புத் தன்மை கொண்டவர்களாகவும், இனப் பெருமைப் பாராட்டுவதில் கர்வம் கொள்ளக்கூடியவர்களாகவும் இருந்தனர். குலப்பெருமையில் மூழ்கித் திழைத்த அவர்களுக்கு கஅபாவை விட்டுவிட்டு அவர்களின் பண்பாட்டுப் பிண்ணனியுடன் எந்தத் தொடர்பும் இல்லாத, பைத்துல் முகத்தஸை மையமாக ஆக்குவது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது. இந்த இனப்பெருமைக்கு சாவு மணியடிக்கும் விதத்தில்தான் பைத்துல் முகத்தஸ் கிப்லாவாக ஆக்கப்பட்டது. இத்தகைய குறுகிய கண்ணோட்டத்தையும் தீண்டாமையையும் இதயத்தில் வைத்துப் பூசிப்பவர்களுக்கு இறைச் செய்தியின் உன்னதத்தை உள்வாங்கிக் கொள்வது சாத்தியமாக இருக்கவில்லை. அதனால்தான் இத்தகைய குறுமதியாளர்களையும் மண்ணின் மைந்தர்கள் என வாதிடுவோர்களையும் இறைமார்க்கத்தில் இணைந்திடுகின்ற பரந்த மனப்பாண்மை கொண்டவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பது தான் துவக்கத்தில் பைத்துல் முகத்தஸைக் கிப்லாவாக நிர்ணயம் செய்ததில் உள்ள இறை விவேகம்.

மூடத்தனமான அரபு தேசியவாத்திற்குப் பதிலாக மனித குலத்தை ஒன்றாகக் கருதுகின்ற, சமமாகப் பாவிக்கின்ற நிலையை அண்ணலாரிடம் பயிற்சி பெற்ற முஸ்லிம் சமூகம் பெற்று விட்டதால் பைத்துல் முகத்தஸின் தலைமைப் பதவியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என அல்லாஹ் கருதியதாலேயே இந்தக் கிப்லா மாற்றம் நடைபெற்றது. கிப்லா மாற்றம் என்பது தொழுகையின் திசை மாற்றச் சடங்காக மட்டும் இருக்க வில்லை என்பதே இதன் பொருள்.

கிப்லா மாற்றத்தைப் பிரகடனம் செய்வதற்கு முன்னோடியாக மேலே விவரிக்கப்பட்ட விவாதத்தை அல்லாஹ் ஆரம்பிப்பது இப்படித்தான்; “ மக்களில் அறிவீனர்கள், ( இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?) இவர்கள் எந்த கிப்லாவை முன்னோக்கிக் கொண்டிருக்கிறார்களோ அதிலிருந்து (திடீரென) இவர்களைத் திருப்பியது எது? என நிச்சயம் கேட்பார்கள். (நபியே! அவர்களிடம்) சொல்வீராக : கிழக்கு, மேற்கு அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியனவாகும். தான் நாடுகின்றவர்களை அவன் நேரான வழியில் செலுத்துகின்றான். மேலும் இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் உம்மத்தன் வஸத்தன் – சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்கு சான்று வழங்குபவர்களாயும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராயும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! (2 : 142 – 143)

இந்த வசனத்தை விளக்கி மௌலானா மௌதூதி எழுதுகின்றார் : முஹம்மது நபியின் சமுதாயத்தின் தலைமைத்துவத்தைக் குறித்த பிரகடனம் இது. இவ்வாறே என்ற சொல்லில், முஹம்மது நபியின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு நேரிய வழியை அறிந்து கொள்ளவும், அதன் மூலம் முன்னேறி உம்மத்தன் வஸத்தன் என்ற உயர் தகுதியைப் பிடிக்கவும் காரணமான வழிகாட்டுதலின் பக்கமும், கிப்லாவை மாற்றிய நிகழ்வின் பக்கமும் என இரண்டையும் சுட்டிக்காட்டும் குறிப்பு உள்ளது. கிப்லா ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று மட்டுமே அதனைக் குறித்து அறிவீனர்கள் புரிந்து வைத்திருந்தனர். உண்மையில், பைத்துல் முகத்தஸிலிருந்த கிப்லாவை கஅபாவுக்கு மாற்றியது உலகத் தலைமைத்துவப் பதவியிலிருந்து அல்லாஹ் இஸ்ரவேலர்களை அதிகாரப்பூர்வமாக அகற்றி விட்டான். முஹம்மது நபியைப் பின்பற்றியவர்களுக்கு அந்தப் பதவியை அளித்துள்ளான் என்பதன் அடையாளமாகும். (தஃப்ஹீமுல் குர்ஆன் பாகம் 1, பக்கம் 108, குறிப்பு 144)

பின்னர் கிப்லா மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ பிரகடனம் அருளப்பட்டது. “நபியே! உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தை நோக்குவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதோ, நீர் எந்தக் கிப்லாவை விரும்புகின்றீரோ அதன் பக்கமே நாம் உம்மை திருப்பி விடுகின்றோம். மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா ஆலயம்) பக்கமாக உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! இனி நீங்கள் எங்கிருப்பினும் (தொழுகைக்காக) அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புவீராக!” (2:144).

உம்முடைய முகம் அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கின்றோம் என்றும், நீங்கள் விரும்புகின்ற கிப்லாவின் திசையை நோக்கி நாம் உம்மைத் திருப்பி விடுகின்றோம் என்றும் கூறப்பட்டிருப்பதை விளக்கும்போது அவர் எழுதுகின்றார்: “…….இஸ்ரேலியர்களின் தலைமைப் பதவி முடிவடைந்து விட்டது எனவும், பைத்துல் முகத்தஸின் தலைமைப் பதவி முடிவடைந்து விட்டது எனவும், இப்றாஹீம் (அலை) அவர்கள் எழுப்பிய மையத்தை நோக்கித் திரும்பும் வேளை வந்து விட்டது எனவும், அண்ணலார் அவர்களே எண்ணத் தொடங்கி விட்டார்கள். (பாகம் 1, பக்கம் 111, குறிப்பு 146).

கிப்லா மாற்றம் தொடர்பான விவாதம் இவ்வாறு முடிவடைகிறது: நீர் எங்கிருந்து புரப்பட்டுச் சென்றாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் திருப்புவீராக. உங்களுக்கு எதிராக மக்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கக் கூடாது என்பதற்காக நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின் போது) அதன் பக்கமாக திருப்புங்கள். – ஆனால் அவர்களைச் சேர்ந்த அக்கிரமக்காரர்கள் தர்க்கித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எனவே நீர் அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். எனக்கே அஞ்சுவீர்களாக! எதற்காகவெனில், நான் என் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும் நீங்கள் நேரிய பாதையை அடையக்கூடும் என்பதற்காகவும்தான். (2:150)

இந்த வசனத்தில் அடிக்குறிப்பிட்டுள்ள பகுதியை விளக்கி மௌதூதி எழுதுகின்றார் : இஸ்ராயீலர்களிடமிருந்து பறிக்கப்பட்டு இந்த சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள உலக தலைமைத்துவம் என்பது ஓர் அருட்கொடையாகும். ஒரு சமுதாயத்திற்கு இம்மையில் கிடைக்கின்ற மிகச் சிறந்த நன்மை என்னவெனில், அவர்களை உலக மக்களின் தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் ஆக்குவதாகும். இறையச்சம், சத்திய மார்க்கத்தின் மூலம் மனித சமூகத்தை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகும். இந்தப் பதவியும் சிறப்பும் ஒரு சமுதாயத்திற்கு வழங்கப்படுவதன் பொருள், அல்லாஹ்வின் அருட்கொடை அவர்களுக்கு முழுமையாக கிடைத்தது விட்டது என்பதாகும். கிப்லா மாற்றம் தொடர்பான இந்தக் கட்டளை மேலே குறிப்பிடப்பட்ட சிறப்புத் தகுதி உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதன் தெளிவான அடையாளமாகும்.

சுருக்கத்தில் இஸ்ராயீலர்களிடம் இருந்த உலகத் தலைமைத்துவத்தைப் பறித்து முஹம்மது நபியின் சமூகத்திடம் ஒப்படைப்பதற்கான நிகழ்வாகவே இருந்தது கிப்லா மாற்றம். இங்கே சில கேள்விகள் எழுகின்றன. ஏன் அல்லாஹ் இப்படி ஒரு முடிவை எடுத்தான்? இஸ்ராயீலர்களிடமிருந்து தலைமைப் பதவியைப் பறிக்கின்ற போது அவர்களிடம் காணப்பட்ட குறைபாடுகள் என்னென்ன?

இஸ்ராயீலர்களிடமிருந்த குறைபாடுகளையும் தகுதியின்மையையும் திருக்குர்ஆன் இவ்வாறு பட்டியலிடுகிறது :

1.பரம்பரை வாதம்

“ஒரு யூதராகவோ (கிறிஸ்தவர்கள் வாதிக்கின்றபடி) ஒரு கிறிஸ்தவராகவோ இல்லாத எவரும் சுவனம் புக மாட்டார் என்று அவர்கள் கூறுகின்றார்கள். இவை அவர்களின் நப்பாசைகளே ஆகும்.” (2:111)

இன்னுமோர் இடத்தில் அவர்களின் பாரம்பர்ய வாதத்தைக் குறித்து கூறுகிறது : “(யூதர்கள் கூறுகின்றார்கள்:) நீங்கள் யூதர்களாக இருங்கள்; நேர் வழி பெறுவீர்கள்! (கிறிஸ்தவர்கள் கூறுகின்றார்கள்:) நீங்கள் கிறிஸ்தவர்களாக இருங்கள்; நேர்வழி பெறுவீர்கள்! (அவர்களிடம்) சொல்வீராக : இல்லை, நான் அனைத்திலிருந்தும் முகம் திருப்பி இப்ராஹீமின் வழிமுறையை ஏற்றுக் கொண்டுள்ளேன். மேலும் அவர் இணை வைப்பவர்களில் ஒருவராய் இருக்கவில்லை.” (2:135)

மனித சமூகத்தை ஒன்றாகக் கருதுகின்றவர்களுக்கே உலகத் தலைமைப் பதவியை நிர்வகிக்கின்ற தகுதி உள்ளது எனும் படிப்பினையை இந்த வசனத்தில் அவர்களின் பாரம்பர்ய வாதத்தைக் கடுமையாக விமர்சித்த வண்ணம் அல்லாஹ் கூறுகின்றான்.

2.சத்தியத்தை மறைத்தல்

கிப்லா மாற்றம் தொடர்பான விவாதம் தொடங்குவதற்கு சற்று முன்பு, இஸ்ராயீல்கள் சத்தியத்தை மறைக்கின்றனர் எனக் குர்ஆன் குற்றம் சாற்றுகிறது.

“அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு சான்றைத் தன்னிடம் வைத்துக் கொண்டு அதனை மறைப்பவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் யார்? மேலும் நீங்கள் செய்து கொண்டிருப்பவைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.” (2:140)

கிப்லா மாற்ற விவாதத்தின் இறுதியில் சத்தியத்தை மறைத்து வைக்கக் கூடியவர்களுக்கு கிடைக்கக் கூடிய இம்மை – மறுமை தண்டனைகள் குறித்து குர்ஆன் விளக்கியுள்ளது.

(2:159,160 & 174) உத்தம சமுதாயம், சமநிலைச் சமுதாயம் ஆகிய சிறப்புகளைப் பெற்ற ஒரு சமூகத்தினரிடம் சத்தியத்திற்கு சான்று பகர்தல் எனும் மிக முக்கியமான தகுதி இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

3. தவறான விளக்கம் அளித்தல்.

அல்லாஹ் கூறுகின்றான் : “சொற்ப விலைக்கு விற்று, சிறிது இலாபம் பெறுவதற்காக தமது கைகளாலேயே ஒரு (சட்ட) நூலை எழுதிப் பின்னர், இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்று (மக்களை நோக்கிக்) கூறுவோருக்குக் கேடுதான்! எனவே, அவர்களுடைய கைகள் எழுதியதும் அவர்களுக்குக் கேடுதான். மேலும் அதனைக் கொண்டு அவர்கள் சம்பாதித்ததும் அவர்களுக்குக் கேடுதான்!” (2:79)

வேத வசனங்களிலிருந்து சுயநலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கானவற்றை  மட்டும் ஏற்றுக் கொண்டு மீதியுள்ளவற்றைப் புறக்கணிக்கவும் செய்கின்ற இஸ்ராயீல்களின் தீய பழக்கத்தைக் குர்ஆன் கண்டிக்கிறது : “நீங்கள் வேதத்தின் ஒரு பகுதியை நம்பி, மறு பகுதியை நிராகரிக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறெந்தக் கூலியும் இல்லை. மறுமை நாளிலோ மிகக்கடுமையான வேதனையின் பக்கம் அவர்கள் திருப்பப்படுவார்கள். மேலும் நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற (இழி) செயல்கள் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை.” (2:85). இஸ்ராயீல்களின் தகுதியையும், பதவியையும் பறித்து இவ்வுலகிலேயே இழிவுபடுத்தப்படுவதற்கான காரணத்தையும் விளக்குகிறது குர்ஆன்.

4. இறைச் சட்டங்களைப் பரிகசிப்பது.

அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை மதிக்காமல் இறைச் சட்டங்களையும் இறைத்தூதரின் போதனைகளையும் பரிகாசம் செய்த இஸ்ராயீல்களைக் குர்ஆன் கண்டிக்கிறது. பசுவின் மீது கொண்ட பக்தியின் காரணமாக அதை வழிபடும் பழக்கத்தைக் கொண்ட இஸ்ராயீல்களை அதிலிருந்து விடுபடச் செய்யவும், அது தவறு என்பதை உணர்த்தவும் பசுவை அறுக்கும்படி கூறப்பட்டபோது அவர்கள் கடைப்பிடித்த நிலைப்பாடு இதற்கு எடுத்துக்காட்டாகும். (2: 67 – 74)

ஓர் உத்தம சமுதாயத்திடம் இருக்க வேண்டிய சிறப்புத் தன்மைகள் தவிர அடிப்படை மனித இயல்புகளான மன வலிமை, உறுதி, விவேகம், வீரம், கடின உழைப்பு, விடுதலை வேட்கை, குறிக்கோள் மீதான பற்று, அர்ப்பணிப்பு, விவகாரங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல், திட்டமிடல், மக்களைச் செயல்படத் தூண்டும் ஆற்றல் ஆகிய குணங்களை இழந்த நிலையில் இருந்தனர் இஸ்ராயீல்கள் என்பதை திருக்குர்ஆன் ‘அல்பகரா’ அத்தியாயத்தின் மூலம் படம் பிடித்துக் காட்டுகிறது.

இத்தகைய ஆன்மீக, மனித வள ஆற்றல்கள் மேலிடுகின்ற போது தான் இறைவனின் பிரதிநிதி எனும் பொறுப்பு ஒரு சமூகத்தின் மீது சுமத்தப்படுகிறது. இத்தகைய ஒரு குழுவினர் உலகில் இல்லை என்றால், மனித வள ஆற்றல்களை மட்டுமே கொண்ட, உலக விவகாரங்களில் மேம்பட்டு நிற்கின்றவர்களுக்கு அல்லாஹ் உலகத் தலைமைப் பதவியை வழங்குகின்றான். இதுவும் அல்லாஹ்வின் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

நன்றி : சமரசம் செப்டம்பர் 2009

தமிழில் – சுல்தானா

கருத்து வேறுபாடுகள் களைய என்ன வழி?
“இந்தச் சமுதாயத்தின் அவல நிலையைக் கண்டு மனம் அழுதது. அதற்கானகாரணங்களைத் தேடி என் மனம் அலை பாய்ந்தது. நான் மால்டா சிறையிலிருக்கும் பொழுது இது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்”. – இப்படிக் கூறியது ஷேகுல் ஹிந்த் மௌலானா மஹ்மூத் உல் ஹஸன். 1920ல் தனது 69 வயதில் இதைக் கூறிய அவர்கள், அக்காலத்தில் சிறந்த மார்க்க அறிஞராக திகழ்ந்தது மட்டுமல்லாமல் ஆங்கிலேய காலணி ஆதிக்கத்தையும் எதிர்த்து போராடியவர்கள்.

ஆலிம்கள் நிறைந்திருந்த அந்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் பொழுது அவர்கள் இதைக் குறிப்பிட்டார்கள். சமுதாயத்தின் அவல நிலைக்கு என்ன காரணம் கூறப்போகிறார்கள் என்று கூட்டம் அவர்களை ஆவலுடன் நோக்கியது.

அவர்கள் கூறினார்கள் : “நமது பிரச்சனைகளுக்கு இரண்டே இரண்டு காரணங்கள் தாம் உள்ளன. அவை,

1.    நாம் குர்ஆனைக் கைவிட்டது.

2.    நமக்கிடையே நடக்கும் உள்சண்டைகள்”.

இப்படிக் கூறிய மௌலானா அவர்கள். அதன்பிறகு சொற்ப காலமே உயிர் வாழ்ந்தார்கள். அந்தச் சொற்ப காலமும் இந்த காரணங்களைக் களைந்து, முஸ்லிம்களை ஒருங்கிணைப்பதற்கு கடுமையாக உழைத்தார்கள்.

இந்தக் காரணங்கள் எவ்வளவு உண்மை நிறைந்தவை என்பது நமக்கெல்லாம் புலப்படும். இந்த இரண்டு காரணங்களும் ஒன்றுக் கொன்று சம்பந்தமுடையவை. இரண்டாவது காரணம் முதல் காரணத்தாலேயே உருவாகிறது.

திருக்குர்ஆன் முஸ்லிம்களை சகோதரப் பாசமுள்ள ஒரே சமுதாயம் எனப் பிரகடணப்படுத்துகிறது. உள்சண்டைகளைப் பற்றி அது கடுமையாக எச்சரிக்கிறது. நாம் திருக்குர்ஆன் விடுத்த பிரகடனத்தையும் எச்சரிக்கையையும் மறந்துவிட்டோம். இன்று அகிலமெங்கும் பரவி வாழும் 120 கோடி  முஸ்லிம்களும் பல கூறுகளாக பிரிந்து கிடக்கின்றோம். சில குறுகிய மனப்போக்குள்ள சுய நல காரணங்களுக்காகவே நமக்குள் பெரும்பாலான சண்டைகள் நடக்கின்றன.

இஸ்லாத்தைப் பயன்படுத்தி இந்தச் சண்டைகளை நாம் சீர்திருத்திக் கொள்ள இயலும். ஆனால், அந்தோ துரதிஷ்டம்…! இஸ்லாத்தின் பெயராலெயே நாம் பிளவுபடுகிறோம். மேலும் மேலும் பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறோம். சிக்கலுக்குள் சிக்கலை உருவாக்குகிறோம். சின்னச் சின்ன ஃபிக்ஹு பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம்.மார்க்க விஷயங்களை அர்த்தப்படுத்துவதில் சிறு சிறு வேறுபாடுகள் எழுவது இயல்பு. இந்தச் சிறிய வேறுபாடுகளை, சிறிய சட்டப் பிரச்சனைகளைப் பெரிய யுத்தகளமாக மாற்றி விடுகிறோம். ஆனால் மிக முக்கியமான, அடிப்படையான விஷயங்கள் அங்கு கைமீறிப் போவதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

இன்று இஸ்லாம் எல்லாத் திசைகளிலிருந்தும், எல்லா முனைகளிலிருந்தும் தாக்கப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையிலேயே நாம் நமக்குள்ளான சண்டைகளை நடத்துகிறோம். இஸ்லாத்தில் ஹராமாக்கப் பட்டவைகள் இன்று ஹலாலாக்கப்படுகின்றன. பல தெய்வக் கொள்கையுடையோரின் பழக்க வழக்கங்கள் இன்று மார்க்கத்தை அறியாத நம்மவர்களிடையே ஊடுருவுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகையே பிரதானமாகக் கொள்ளும் ‘ஹீடனிஸம் எனும் கொள்கை நம்மவர்களை ஆக்கிரமிக்கிறது. வெட்கமின்மை வரவேற்கப்படுகின்றன. ஒழுக்கச் சீர்கேடுகள் நவநாகரீக கலாச்சாரமாக நம்பப்படுகின்றன. நமது சமுதாயம் சினிமாப் படங்களாலும், தொலைக்காட்சிப்பெட்டிகளாலும், ஆபாச இலக்கியங்களாலும் சீரழிக்கப்படுகின்றன. நமது சமுதாயத்தின் அனைத்து அடுக்கு மக்களிடமும் லஞ்சம் புகுந்து விளையாடுகிறது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாரிசுகள் தாமே நாம்…..!   இவைகளை அவர்கள் அனுமதித்தார்களா? இவைகளுக்கு எதிராக நமது கவனத்தை திருப்ப வேண்டாமா? இத்தனைக் கொடுமைகளும், தீமைகளும் அரங்கேறி வரும் இந்த உலகம் ஒருநாள் அழிந்து விடும். மறுஉலகத்தில் நாம் எழுப்பப்படுவோம். இறைவன் அவன் முன் நிறுத்தி நம்மிடம் கேட்பான். “இந்தக் கொடுமைகளுக்கும், தீமைகளுக்கும் எதிராக நீ என்னப்பா செய்தாய்?”

“யா அல்லாஹ்! ‘ரஃபஅ யதைன்’ (தொழுகையில் சில இடங்களில் கைகளை உயர்த்துவது சம்பந்தமான பிரச்சனை) என்ற நூலை எழுதினேன்” என்று நாம் பதிலுரைக்க முடியுமா? இறைவன் விட்டுவிடுவானா?

ஒரு தடவை நான் மௌலானா அன்வர் ஷாஹ் கஷ்மீரி அவர்கள் மிகவும் கவலையாக இருக்கக் கண்டேன். என்னவென்று வினவினேன். “நான் என் மொத்த வாழ்க்கையையும் வீணாக்கி விட்டேன்” என்றார்கள்.

உங்கள் வாழ்நாள் முழுவதும் இஸ்லாத்தைப் பிறருக்கு கற்றுக் கொடுப்பதிலேயே செலவழித்திருக்கிறீர்கள். உங்கள் மாணவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் இன்று ஆலிம்களாக அறிஞர் பெருமக்களாக உள்ளனர். அவர்களெல்லாம் இந்த இஸ்லாத்திற்காக சேவை செய்கிறார்கள். இதைவிட வேறு என்ன கவலை உங்களுக்கு?” – நான்.

பாருங்கள் நமது முயற்சியின் அனைத்தின் முழு நோக்கங்களும் என்னவாக இருக்கிறது தெரியுமா?ஏன் ஹனஃபி மத்ஹபு பிற மத்ஹபுகளை விட சிறந்தது என்று நிரூபிக்கத்தான். இமாம் அபூஹனீஃபா அவர்கள் இதற்கு தேவையுடைவர்களாக இருக்கவில்லை. இமாம் ஷாஃபி, இமாம் மாலிக், இமாம் அஹமது இப்னு ஹம்பல் ஆகியோரும் தலைசிறந்த மார்க்க அறிஞர்கள்.

இன்று இஸ்லாத்தின் அடிப்படை வேர்களில் தாக்குதல் நடக்கிறது. ஆனால் நாம் அதன் கிளைகள் பற்றி கவலைப்படுகிறோம்” என்று மௌலானா அவர்கள் பதிலுரைத்தார்கள். மார்க்க விஷயங்களில் மாற்பட்ட கருத்துகள் இருப்பதும் அதற்கான விவாதங்கள் நடப்பதும் தவறானதல்ல.

ஆனால் மார்க்க அறிவு அவ்வளவாக இல்லாத பல முஸ்லிம்கள் இந்த வேறுபாடுகளைக் கண்டு வேறு மாதிரியாக சிந்திக்கின்றனர். ஃபிக்ஹுடைய சட்டங்கள் அனைத்தையும் எடுத்து விட்டு வேறு ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது சாத்தியமானதும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல. அறிவும் நாணயமும் உள்ள மக்களிடத்தில் கருத்து வேற்பாடுகள் சகஜமே.

ஒவ்வொரு விஷயத்திலும் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் ஒத்தகருத்து இருக்கும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. அனைவரும் வாய் பேச முடியாத ஊமைகளாக இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். அல்லது அவர்கள் நாணயமற்றவர்களாக இருக்க வேண்டும், தங்களுக்கு தவறு என்று தெரிவதை ஏற்றுக் கொள்வதற்கு. நாம் அந்த கருத்து வேறுபாடுகளை மிகைப்படுத்தும் பொழுது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் கூட இருந்த நபித்தோழர்களுக்கே ஃபிக்ஹு விஷயங்களில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதே போல் ‘இஜ்திஹாது’ செய்யும் முஜ்தஹிதீன்களிடமும் கருத்து வேறுபாடுகள் நிலவின.

ஆனால் கண்ணியமிக்க நபித்தோழர்களோ, மதிப்புமிக்க முஜ்தஹிதீன்களோ அவைகளைச் சண்டைகளாக மாற்ற வில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் கருத்து மாறுபட்டார்கள். ஆனால் அவர்களிடையே நிலவி வந்த அன்பையும், அரவணைப்பையும் அவர்கள் விட்டுவிடவில்லை. அவைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களிடையே இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் பொன்னொளி மேல் மின்னியது.

குர்ஆனும் ஹதீஸும்  எதனைத் தவறு என்று சொல்கின்றனவோ அவ்விஷயங்களில் எந்தக் கருத்து வேறுபாடும் கொள்ள முடியாது. மார்க்க விஷயங்களை, கொள்கையை, நம்பிக்கையை விட்டுக் கொடுக்க இஸ்லாத்தில் இடமே இல்லை. ஷரீஅத் எவைகளை ஹலால் என்று அனுமதிக்கிறதோ, எவைகளை ஹராம் என்று விலக்குகின்றதோ அவ்விஷயங்களை மாற்றுவதற்கோ, கூட்டுவதற்கோ, குறைப்பதற்கோ நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.

ஆனால் குர்ஆனும் ஹதீஸும் நேரடியாக குறிப்பிடாத விஷயங்களில், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளை எடுக்கலாம் என்ற விஷயங்களில், முஜ்தஹிதீன்கள் ஷரீஅத்திற்கு நெறுக்கமான தீர்வுகளை வடித்து தருகிறார்கள். இதில் அவர்கள் தங்கள் முழு திறனையும் பயபடுத்துகின்றனர். இங்கு வேறுபாடுகளுக்கு சாத்தியமுண்டு.

இங்கு கருத்துவேறுபாடுகள் தோன்றுகின்றன. நான்கு இமாம்களைப் போன்று நேர்மையாக, நியாயமாக எல்லாவற்றுக்கும் மேலாக தக்வா என்னும் இறையச்சத்துடன் முஜ்தஹிதீன்கள் செய்யும்வரை அவர்களது மாறுபட்ட கருத்துகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். சட்ட வல்லுனர்களிடையே ஏற்படும் இம்மாதிரியான ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகளால் இன்னொரு நன்மையும் உண்டு. ஒரு பிரச்சனையின் பல கோணங்கள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வரும். இது பல நன்மைகளை விளைவிக்கும்.

ஆனால் பிரச்சனைகளை மிகைப்படுத்தினால், எல்லா அறிவும் தங்களுக்கே இருப்பதுபோல் அடாவடியாக நடந்து கொண்டால், அல்லது அவர்களுக்கென்று ஒரு பிரிவாரைச் சேர்த்துக் கொண்டால்தான் சண்டைகள் ஆரம்பமாகின்றன. இதே மாதிரியான நிலை இஸ்லாமிய அமைப்புகளிடமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பெரும்பாலான அமைப்பினர் தாங்கள் எந்தத்துறையைச் சார்ந்திருக்கிறார்களோ,அந்தந்த துறைகளில் சமுதாயத்திற்குப் பலன் தரும் வகையில் தங்களால் முடிந்த நல்ல பணிகளைச் செய்து வருகிறார்கள். இந்த அமைப்பினர் தங்களுக்குள்ளால் ஒரு ஒத்துழைப்பு எனும் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவுக் கரங்களை நீட்டி கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் இருப்பது இயல்பே என்ற உணர்வு மேலோங்கிட வேண்டும். இது நடந்தால் இவர்கள் இந்த உலகில் தவிர்க்க இயலாத சக்தியாக மாறி விடுவார்கள்.

ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் துறைகளையே, தாங்கள் செயல்படுத்தும் முறைமைகளையே சரியென்றும் எண்ணுவதுதான் துரதிர்ஷ்டம்! ஒரு அமைப்பிலிருந்து ஒரு மனிதன் வெளியேறி இன்னொரு அமைப்பில் சேர்ந்து விடுவாரானால், அவர் இஸ்லாத்தை விட்டே வெளியேறியவர் என்று பேசப்படுகிறது. இதுதான் ஜாஹிலியா எனும் அறியாமைக் கால குலவாதம்!

அடக்கமான நல்ல மனிதர்கள் மறைந்து போய் விடவில்லை. நமது இப்போதைய அந்த நல்ல மனிதர்களை நாணிலதித்தில் மறுமலர்ச்சி செய்ய வேண்டும். குறுகிய வட்டத்திற்குள்ளிருக்கும் இந்தச் சமுதாயத்தை அதிலிருந்து விடுவிக்க வேண்டும். இந்தப் பூமிப் பந்தின் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

-ஃகாலித் பேக்

நன்றி : இம்பேக்ட் இண்டர்நேசனல்

தமிழில் : MSAH

நீங்கள் எந்த கட்சி?
மன்னை தாஜுதீன்

அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளது. யார் எந்த கட்சியுடன் கூட்டு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று ஒவ்வொரு கட்சியும் கணக்குப்போட்டுக் கொண்டு இருக்கிறது. முஸ்லிம் கட்சிகளும் விதிவிலக்கல்ல. இச்சமயத்தில்நாம் எந்த கட்சியினராக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

முஸ்லிம் என்றால் யார்? அவன் யாருக்காக உழைக்க வேண்டும்? ஏன் உழைக்க வேண்டும்? எத்தகைய இலட்சியவாதியாக மிளிர வேண்டும்? அவன் இந்த பூமிப் பந்தில் எத்தகைய மற்றத்தை ஏர்படுத்த வேண்டும்? ஏன் ஏற்படுத்த வேண்டும்? இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு முன்னால் மனிதன் யார், அவனிடமிருக்கும் அறிவு, திறமை, ஆற்றல், செல்வாக்கு, செல்வம், வசதிவாய்ப்பு, நேரம், ஆயுள் இவை அனைத்தையும் யார் தந்தது? எதற்காக தரப்பட்டன? என்ற வினாவுக்கு விடை காண வேண்டும்.

எந்தப் பொருளும் எந்த நோக்கமும் இன்றி படைக்கப் படவில்லை. உயர்திறனும் மதிநுட்பமும் கொண்ட படைப்பின் அற்புதமாக திகழும் மனித இனம் நோக்கமின்றியோ, காரணமின்றியோ படைக்கப்பட்டு இருக்குமா? இருக்காது. அப்படியென்றால் அந்த நோக்கத்தை யார் சொல்ல வேண்டும்? நம்மைப் போன்ற மனிதரா? அல்லது நம்மைப் படைத்த இறைவனா?

ஐயத்திற்கு இடமின்றி நம்மைப் படைத்தவன்தான் படைத்த நோக்கத்தைச் சொல்ல வேண்டும். உருவாக்குபவன்தானே விதிகளையும் விதிமுறைகளையும் உண்டாக்க வேண்டும். நாம் யாரை வணங்க வேண்டும், யாரை வணங்கக் கூடாது, எதனை உண்ண வேண்டும், எதனை உண்ணக் கூடாது, எதனைப் பார்க்க வேண்டும், எதனைப் பார்க்கக் கூடாது, எதனைச் செய்ய வேண்டும், எதனைச் செய்யக் கூடாது முதலியவற்றையெல்லாம் படைத்தவன் தானே சொல்ல வேண்டும். ஆம்..! சொல்லியிருக்கிறான். அதற்காகத்தான் இறைத்தூதர்களை அனுப்பினான். அவர்கள் மூலம் தன் திட்டத்தையும் அருளினான். அந்த திட்டத்திற்குப் பெயர்தான் இஸ்லாம். அதனை ஏற்றுக் கொள்பவர்தான் முஸ்லிம். இப்போது அவன் தன்னைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே அஞ்சி வாழ்பவனாகவும், அவனுக்கு மட்டுமே தன் தலையை சாய்ப்பவனாகவும் ஆகி விடுகின்றான். இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் மட்டுமே கீழ்படிந்து வாழ்பவனாக மாறி விடுகின்றான்.

தனது மணோ இச்சைக்கோ தன்னைப் போன்ற பிற மனிதர்களின் விருப்பு வெறுப்புக்கோ அடிபணிவதில்லை. சகமனிதனை அல்லது பிற படைப்பினங்களைக் கண்டு அஞ்சுவதில்லை. இப்படிப்பட்டவனால்தான் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்ற முடியும். இப்படிப்பட்ட மனிதன் மீதுதான் பொறுப்பும், கடமையும் சுமத்தப்படுகின்றன. அப்பொறுப்பும் கடமையும் என்ன?

பூமியில் இறைவனின் வாக்கு மேலோங்க வேண்டும்; மனிதர்கள் மீதான அடிமைத்தளைகள் அகற்றப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காகத் தன்னுடைய அறிவு, திறன், வசதி வாய்ப்புகள், செல்வாக்கு, ஆயுள் என அனைத்தையும் பயன்படுத்தி முழு வீச்சோடு பாடுபட வேண்டும். இத்திறமைகளைப் பயன்படுத்தி மனிதகுல முன்னேற்றத்திற்காகவும் பண்பாட்டு வளர்ச்சிக்காகவும், உலக அமைதிக்காகவும் இயற்கையின் இரகசியங்களை வெளிப்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவும், நீதிமிக்க சமூகங்களை நிலைநாட்டுவதற்காகவும் அவன் உழைக்க வேண்டும்.

இது ஒரு மாபெரும் பணியாகும். இந்த மகத்தான பணி ஏதோ ஓர் ஊரிலோ, ஒரு கிராமத்திலோ மட்டும் செய்யக் கூடியதன்று. மாறாக ஒவ்வொரு குக்கிராமத்திலும் இன்று குக்கிராமமாக மாறிப்போன முழு உலகிற்கும் செய்ய வேண்டிய பணியாகும்.

உலகம் இறைவனின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் போதுதான் அமைதி பெறும் என்பது உறுதி. இந்த நோக்கத்தைக் கொண்ட தனிமனிதர்கள் ஒரு குழுவாக, அமைப்பாக, கட்சியாக இணைய வேண்டும். ஆம், நாமும் கட்சிக்காரர்கள்தாம். அல்லாஹ்வின் கட்சிக்காரர்கள்.

நாம் அன்றாட வாழ்வில் பார்க்கிறோம்; ஏதேனும் இனத்திற்காகவோ, மொழிக்காகவோ பாடுபடும் கட்சிக்காரனைப் பாருங்கள். எத்தகைய அர்ப்பணிப்பு! உழைப்பு! தனது தாய் மரணப் படுக்கையில் இருக்கும் நிலையில் கூட தனது கட்சிப் பரப்புரைக்காகப் பயணம் செய்து, தனது பணம், நேரம், அறிவு, ஆற்றல் அனைத்தையும் முழுவீச்சில் செயல்படுத்தி தனது கட்சியை ஆட்சியில் அமர்த்திய பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றான். அப்பப்பா! என்ன ஒரு தியாகம்.

தனது கட்சியைக் குறித்து யாரேனும் தவறாகவோ, இழிவாகவோ பேசினால் விட்டுவிடுகிறானா? தனது தலைவரைப் பிறர் கேவலமாகப் பேச அனுமதிக்கின்றானா? கட்சித்தலைவரின் நன்மைக்காத் டன் உடல் உறுப்பைச் சிதைக்கவும் தயாராகி விடுகின்றான். அவ்வளவு ஏன், கட்சியின் மானத்தைக் காக்க உயிரைக் கொடுக்கவும் தயங்குவதில்லை.

இவையெல்லாம் எதற்காக? தான் சார்ந்த கட்சியும், தான் பின்பற்றும் தலைவரும்தான். இந்தச் சமுதாயத்திற்கு நன்மை செய்வார்கள் எனும் உறுதியான நம்பிக்கை. ஆனால் அந்தோ பரிதாபம்! அந்தக் கட்சித் தொண்டன் எந்தத் தலைவருக்காகப் பாடுபடுகின்றானோ அந்தத் தலைவரா அவனைப் படைத்தார்? வாழ்வதற்கு உயிர், சுவாசிக்க காற்று, ஓடியாடி உழக்க உடல், உடலில் புதைந்திருக்கும் எண்ணற்ற ஆற்றல்கள், சிந்திக்கும் திறன், பேச்சாற்றல் ஆகிய அனைத்தையும் அந்தத் தலைவரா வழங்கினார்? இல்லையே! இவற்றையெல்லாம் அவரால் படைக்கவோ, உற்பத்தி செய்யவோ முடியாது. ஏனெனில் அவர் இறைவன் அல்லர்.

இப்போது சொல்லுங்கள். நீங்கள் உங்களைப் படைத்தவனைத்தானே இறைவனாக, அதிபதியாக, எஜமானனாக ஏற்றிருக்கிறீர்கள்? அவனுடைய வாக்கு மேலோங்கவும், அவனுடைய சட்ட திட்டங்கள் வெற்றி பெறவும் தானே நீங்கள் உழைக்க வேண்டும். அதற்கு மற்றமாக செயல்பட்டால் உங்கள் அதிபதி உங்களைப் பற்றி என்ன நினைப்பான்?

ஒருவன் உங்களுடைய நிறுவனத்தில் நீங்கள் விதித்துள்ள சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வேலைக்குச் சேர்கிறான். உங்களிடமிருந்து சம்பளம், ஊக்கத்தொகை, இதர சலுகைகள் என  எல்லாவற்றையும் பெறுகிறான். இவையனத்தையும் பெற்றுக் கொண்டு உங்களுக்கு எதிராக மற்றொரு நிறுவனத்துக்கு உதவுகிறான். அல்லது அதற்காக உழைக்கிறான் எனில் அதை ஒப்புக் கொள்வீர்களா?

ஒரு கட்சிக்காரன் தனது கட்சியில் இருந்து கொண்டே இன்னொரு கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறான், உழைக்கிறான், ஓட்டுப்போடுகிறான் எனில் விடுவீர்களா?

துரோகி, நயவஞ்சகன், உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்பவன், நன்றி கெட்டவன்,தன்னல வெறி பிடித்தவன் முதலிய வசைகள் அவன் மீது வீசப்படும் அல்லவா?

உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். முஸ்லிம்களாகிய நாம் நம்மைப் படைத்த இறைவனுக்காகப் பாடுபட வேண்டுமா? அல்லது வேறு யாருக்காகவுமா?

இறைவனது  கட்சி மேலோங்க உழைக்க வேண்டுமா? அல்லது இதர கட்சிகளுக்காக கொடி பிடிக்க வேண்டுமா?

மனித இனத்தை துண்டு துண்டுகளாய்ப் பிரித்து, மோதவிட்டு , வெறுப்பை விதைத்து பதவி அறுவடை காண்பவர்களுக்காக உழைக்க வேண்டுமா? அல்லது மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தையரின் பிள்ளைகள் , ஒரு சீப்பின் பற்கள் போன்றவர்கள் எனக் கொள்கை வகுத்துத் தந்த தூய இறைவனின் கட்சிக்காகப் போராட வேண்டுமா?

முடிவு செய்ய வேண்டிய காலக் கட்டத்திலும், கட்டாயத்திலும் நாம் உள்ளோம். ஏனெனில் நம்மைப் படைத்தவனின் எதிர்பார்ப்பு நாம் அவனுக்காக, அவனுடைய கட்சிக்காக, அவனுடைய ஆட்சி மலர்வதற்காக உழைக்க வேண்டும் என்பதுதான் பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்க்கைக்குத் தேவையான அருட்கொடைகள் அனைத்தையும் அள்ளி அள்ளி வழங்கிய இறைவனுக்காக, அவனுடைய கட்சிக்காக உழைப்பதை விட்டு வேறு ஒருவருக்கா? சே..! அத்தகைய நன்றி கெட்ட, கேடு கெட்ட இழிநிலையிலிருந்து இறைவன் நம்மைக் காப்பானாக…!

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஒரு பொன்மொழியுடன் நிறைவு செய்கிறேன்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள், பிறரது உலக நன்மைக்காக தனது மறுமையை யார் பாழ்படுத்திக் கொள்கிறாரோ அவர்தாம் உங்களில் பரிதாபத்திற்குரியவர் ஆவார்.

நன்றி – சமரசம்

இயேசு அழைக்கிறார்..!
கர்த்தரின் திருப்பெயரால்….

அன்பான சகோதர, சகோதரிகளே…!  கர்த்தருடைய நீதி விசாரணை நாள் நெருங்கி வருகிறது.

அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவருனும் அறியான், பரலோகத்தில் உள்ள தூதர்களும் அறியார்கள்.

(பைபிள் புதிய ஏற்பாடு – மத்தேயு 24:36)

சகோதர, சகோதரிகளே…!   கர்த்தர் சொல்லும் அந்த நாள் நம்மை நெருங்கி வருகிறது… அது எப்பொழுது வருமோ என நாம் பயத்துடன் எதிபார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில், நாம் இந்த உலகத்து அற்ப வாழ்வில் நன்மை செய்திருந்தால் பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியும், இவ்வுலகில் தீமை செய்திருந்தால் பரலோகத்தில் நமக்கு இழிவும், நாசமும் கொண்ட நரகத்தையும் தருவதாக கர்த்தரே சொல்கிறார்.

நாம் செய்த கருமத்திற்கு அந்நாளில் நாம் தானே அனுபவித்தாக வேண்டும்…? வேறு யாரும் நம் கருமங்களுக்கான பொறுப்பைச் சுமக்க முடியாது என்பதை பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது:

பாவம் செய்கின்ற ஆத்மாவே சாகும்.குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை.தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கிறது. துன்மார்க்கனுடைய துன்மார்க்கம் அவன்மேல் தான் இருக்கும்.

(பழைய ஏற்பாடு – எசக்கியேல் 18:20)

ஆக தப்பிச் செல்ல முடியாத அந்த மகத்தான நாளின் ராஜா கர்த்தர் மட்டுமே…!

கர்த்தரே மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா. அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்க மாட்டார்கள்.

(பழைய ஏற்பாடு – எரேமியா 10:10)

அப்படிப்பட்ட ஒரே தேவனாகிய கர்த்தரை மட்டுமே நாம் வணங்க வேண்டும்.  அப்படி கர்த்தரை வணங்காமல் இருந்தால் பரலோக ராஜ்ஜியத்தில் இடமில்லை என்பதை ஏசுவே கூறுகிறார்.

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கின்றவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானே அல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் பிரவேசிப்பதில்லை.

(புதிய  ஏற்பாடு – மத்தேயு 7:21)

ஏசு சொல்கின்றபடி ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும். அதை விடுத்து ஏசுவையே வணங்கச் சொல்வது, ஏசு சொன்னதற்கு மாற்றமாகாதா…? ஏசுவின் பெயரைச் சொல்லி இல்லாத காரியம் பண்ணுகிறவர்களை ஏசு மிகவும் எச்சரிக்கிறார். இதோ,

அந்நாளில் (நீதி விசாரணை நாளில்) அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலேயே  தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா…? உமது நாமத்தினாலேயே  அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா…? என்பார்கள். அப்போது நான் (ஏசு) ஒருக்காலும் உங்களை அறியவில்லை… அக்கிரமச் செய்கையாரே! என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்வேன்.

(மத்தேயு 7:21)

அன்பான சகோதர, சகோதரிகளே…!  ஏசு வணங்கப்படுபவர் அல்லவர். ஏசுவுடன் சேர்ந்து நாமும் வணங்க வேண்டியது அந்த கர்த்தரை மட்டும்தான். கர்த்தர் என்பதைத்தன் ஆங்கிலத்தில்  GOD என்றும், அரபியில் அல்லாஹ் என்றும் அழைக்கின்றனர். அந்த கர்த்தராகிய அல்லாஹ், ஏசுவைப் பற்றி இறுதி ஏற்பாடாகிய திருக்குர்ஆனிலே குறிப்பிடுகிறார். ஏசுவை குர்ஆன் ஈஸா என்று அழைக்கிறது.

பின்னர் (மேரி என்ற மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்: மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்! ஹாரூனின் (ஆரோன்) சகோதரியே…! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை. (என்று கூறினார்கள்.)

(ஆனால் தம் குழந்தையிடமே கேட்கும்படி) அதன்பால் மேரி சுட்டிக்காட்டினார். நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் எப்படி பேசுவோம்? என்று கூறினார்கள். நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கிறேன். அவன் எனக்கு வேத்த்தைக் கொடுத்திருக்கிறான். இன்னும் அவன் என்னைத் தூதராக ஆக்கியிருக்கின்றான்.

இன்னும் நான் எங்கிருந்தாலும் அவன் என்னை நற்பாக்கியமுடையவனாக ஆக்கியிருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (ஏழை வரி) நிறைவேற்ற எனக்கு கட்டளையிட்டிருக்கின்றான். என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவி இருக்கின்றான்.) நற்பேறு கெட்ட பெருமைக்காரணாக என்னை அவன் ஆக்கவில்லை. இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர்பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும் என்று (குழந்தை – ஏசு) கூறியது.

இ(த்தகைய)வர்தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஏசு ஆவார்.) எதைக்குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கின்றார்களோ அதைப்பற்றி உண்மையான சொல் (இதுவேயாகும்.)

(திருக்குர்ஆன் அத்தியாயம் 19. வசனம் 27-34.)

அதுமட்டுமல்ல ஏசு என்ற ஈஸா (அவர் மீது சாந்தி நிலவட்டுமாக!) மனிதர்கள் கொல்லப்படவும் இல்லை. எதிரிகள் அவரைக் கொல்ல நினைத்தபோது கர்த்தர் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டார்.

இன்னும் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் (மேரியின்) குமாரராகிய ஈஸா (ஏசு) மஸீஹை கொன்று விட்டோம் என்று அவர்கள் (யூதர்கள்) கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்.) அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான். மேலும் இ(வ்விசயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். இன்னும் அல்லஹ் வல்லமை மிக்கோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

(திருக்குர்ஆன் அத்தியாயம் 4. வசனம் 157,158.)

கர்த்தர் அளவில் உயத்தப்பட்ட ஏசு நெருங்கிவரும் இறுதிநாளின் அத்தாட்சியாக மீண்டும் இந்த உலகில் தோன்றவிருப்பதை முஸ்லிம்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நிச்சயமாக அவர் (ஏசு) இறுதி காலத்திற்குறிய அத்தாட்சியாவார். ஆகவே நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம். மேலும் என்னையே பின்பற்றுங்கள். இதுவே நேரான வழியாகும்.

(திருக்குர்ஆன் அத்தியாயம் 43. வசனம் 61.)

இதற்குப் பின்னரும் ஏசுவையோ அல்லது அவரது தாயாரையோ அல்லது சிலுவையையோ வணங்குபவர்களுக்கும், கர்த்தர் இறக்கியருளிய இறுதி ஏற்பாடான திருக்குர்ஆனை நம்பாதவர்களுக்கும் எதிராக நீதி விசாரணை நாளில் ஏசுவே சாட்சி சொல்லவிருக்கிறார்.

இன்னும் மர்யம் (மேரி) உடைய மகன் ஈஸா (ஏசு)வே, என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது (ஏசுவாகிய) அவர்,  (இறைவா!) நீ மிகவும் தூய்மையானவன். எனக்கு உரிமையில்லாத ஒன்றை சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகின்றாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறினார்.

நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே (கர்த்தரையே) வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களுக்கு கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களை கண்காணிப்பவனாக இருந்தேன். அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருள்களின் மீதும் சாட்சியாக இருக்கின்றாய் (என்றும் கூறுவார்.)

(திருக்குர்ஆன் அத்தியாயம் 5. வசனம் 116,117.)

அன்பான கிறிஸ்துவ சகோதர சகோதரிகளே…!  எல்லாம் வல்ல கர்த்தராகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதன் மூலம் மட்டுமே பரலோக ராஜ்ஜியத்தில் மோட்சத்தை அடைய முடியும் என்று இதன் மூலம் அறியலாம். அறியாமையில் இருந்து விடுபட்டு நேர்வழியின் பக்கம் வரும் கிறிஸ்துவர்களை நோக்கி எல்லாம் வல்ல கர்த்தர் கூறுகிறார்,

நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் விசுவாசிகளுக்கு கடும் பகைவர்களாகவே (தூதரே!) நீர் காண்பீர்.

நிச்சயமாக நாங்கள் கிறிஸ்துவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, விசுவாசிகளுக்கு (முஸ்லிம்களுக்கு) நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர். ஏனென்றால், அவர்களில் கற்ற்றிந்த குருமார்களும், துறவிகளும் இருகின்றனர்.மேலும், அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.

இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்ட்தை (திருக்குர் ஆன் வசனத்தை)ச் செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்து கொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர். எங்கள் இறைவனே! நாங்கள் (இவ்வேத்த்தின்) மீது  நம்பிக்கை கொண்டோம். எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி சொல்வோருடன் எங்களையும் பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்.

(திருக்குர்ஆன் அத்தியாயம் 5. வசனம் 82-84.)

அன்பார்ந்த கிறிஸ்துவ சகோதர சகோதரிகளே…! ஒருவரை நாம் உண்மையிலேயே மதிக்கிறோம் என்றால், அவர் சொல்வதை அப்படியே எடுத்து நடப்பதுதான். ஏசுவின் பெயரால் அவர் அல்லாதவர்கள் சொல்வதையெல்லாம் பின்பற்றுவது சரியா? அல்லது எந்த ஏசுவை நீங்கள் உயிருக்குயிராக மதிக்கிறீர்களோ அந்த ஏசுவை அப்படியே பின்பற்றுவது சரியா? சற்று பொறுமையுடன் சிந்தித்துப் பாருங்கள்…!

சத்தியத்தை ஏற்றுக்கொண்ட மக்களாக நாம் வாழ்ந்திட, ஏசு அழைக்கும் மெய்வழியான இஸ்லாமிய நெறியின் பக்கம் வாருங்கள்…! பரலோக ராஜ்ஜியத்தில் பரிபூரண வெற்றியைப் பெருங்கள்…! கர்த்தர்  நம் அனைவருக்கும் கிருபை  செய்வாராக…!

நன்றி – சமூக நல்லிணக்க மையம்

ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்களுடன் ஒரு சிறை அனுபவம்
ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்களுடன் ஒரு சிறை அனுபவம்

“நான் பலஸ்தீன நாட்டவன். குழந்தைப் பருவம் முதல் இந்தப் புனித பூமியில் நடைபயின்றவன் நான். இந்த மண்ணிலேயே வீர மரணமடைந்து (ஷஹீதாகி) இங்கேயே அடக்கம் செய்யப்பட வேண்டுமென்று எப்பொழுதும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் மனதுதான் என்னுடையது. இந்த உலகத்தில் நீங்கள் சுவர்க்கமாகக் கருதும் எப்பகுதிக்கு அழைத்துக் கொண்டு சென்றாலும் நான் எனது சமூகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாரில்லை. உங்களால் நரகமாக்கப்பட்ட இந்தப் பூமிதான் எனக்கு, உங்களது சுவர்க்க பூமியைவிட மிகவும் விருப்பத்திற்குரியது.”…….

உடலைப் பலவீனப்படுத்தும் நோய்களையும் யூத வெஞ்சிறையில் கொடிய சித்திரவதைகளையும் பொருட்படுத்தாமல் பிறந்த மண்ணிற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் உயிர் நாடியாகத் திகழ்ந்த அஹ்மத் யாஸீன் அவர்களுடன் சிறையில் ஐந்து மாதங்கள் உடனிருந்து சேவை புரிந்த சிறைத்தோழர் முஹ்ஸின் அபூ அய்துவா அவர்கள் அந்த வீரத்தியாகி மரணமடைந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவருடனான சிறை அனுபவ நினைவலைகளை பத்திரிகை உல கோடு பகிர்ந்துகொள்கிறார்.

பதற்றப்படாத உள்ளமும் வார்த் தைகளால் விபரிக்க முடியாத துணிவும் கொண்ட ஒரு மாமனிதரின் முன்னால் நிற்கிறேன் என்ற எண்ணம் எனக்கு பல முறை ஏற்பட்டதுண்டு. உடல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தா லும் அவருடைய சிந்தனைகளுக்கோ அறிவுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்பட வில்லை. தெளிவான சிந்தனைகளும் சீரிய பார்வையும் அவரை பிற தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. இஸ்லரேலியக் கொடூரங்கள் அக்கிரமமான ஏகாதிபத்திய ஆசைகள் ஆகியவற்றின் அஸ்திவாரத்தை தகர்த் தெறிவதுதான் அவருடைய உறுதியான சிந்தனையாக இருந்தது. இதுதான் அவரை பிற தலைவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தியது.

இதுவரை கண்டிராத இடையாராத போராட்ட வீரியம் கொண்ட உருக்கு மனிதராக ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்கள் திகழ்ந்தாலும் ஒரு மலரின் தூய்மையைப் போன்றவர் அவர். அதிசயிக்கத்தக்க குணநலன்களைக் கொண்ட அந்த மனிதரையும் தங்களுக்கேற்பட்ட அவமதிப்பிற்கு (பலஸ்தீன் பூமியை இஸ்ரேல் அபகரித்தது) செங்குருதியால் பதிலளிக்கும் அவர்களு டைய தோழர்களையும் பற்றி வார்த்தைகளால் விபரிப்பது எங்களது மொழி யில் முடியாத ஒன்று. ஆனாலும் முன்னோர்களைப் பற்றிய நினைவலை களை அவர்களைப் பின்தொடர்வோர் தங்களது நாவின் மூலம் உயிர்ப்பிப்பது அவர்களுக்கு செய்யும் செஞ்சோற்றுக் கடனாகும்.

* தங்களுடைய கட்டுரைகளில் வார்த்தைகளால் விபரிக்க முடியாத துணிவு கொண்ட ஒரு மாமனிதர் என்று ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்களை நீங் கள் குறிப்பிடுகிறீர்கள். உங்களது ஐந்து மாத சிறை வாழ்க்கையில் இத்தகைய உவமையைப் போன்று ஏதேனும் நிகழ்வுகளை அவரிடம் கண்டீர்களா?

இது சம்பந்தமாக நான் கூற விரும்புவது என்னவென்றால் ஷெய்க் அஹ் மத் யாஸீன் அவர்களைப் பற்றி அவர் களுடைய ஆதரவாளர்களும் நண்பர் களும் கூறுவதைவிட அவர்களின் எதிரிகள் கூட ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர் களின் நெஞ்சுறுதியையும் அவர்கள் தாம் கொண்ட இலட்சியத்தில்- வார்த்தை களால் விபரிக்க முடியாத உறுதியையும் அங்கீகரித்தார்கள். இது சம்பந்தமாக அவர்களுடனான இரண்டு அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கி றேன்.

நானும் ஷெய்க் அவர்களும் செய்த குற்றத்தின் விசாரணை நாடகத்திற்குப் பின் நாங்கள் இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்படவேண்டுமென்ற தீர்ப்பை நான் அறிந்தேன். ஷெய்க் அவர்களின் அருகாமை எனக்கு மகிழ்ச் சியை ஏற்படுத்தியது. ஆனாலும் நோயா ளியான ஒரு மனிதருக்கு சிறைத் தண்டனை அளித்ததை அறிந்து நான் நிலைகுலைந்தேன், சிறைஅதிகாரி யோடு நான் வாதிட்டேன்.

“வயோதிபரான ஒரு நிரபராதியை சிறையில் அடைக்கும் அளவுக்கும் மனி தத் தன்மை இழந்தவரா நீங்கள்?” என்று நான் கேட்டபோது அந்த நபர் இவ் வாறு பதிலளித்தார். “உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து நடக்கக் கூட இய லாத இந்த மனிதரை இனியும் சிறையில் அடைத்து எங்களுக்கு என்ன பயன்? நாங்கள் அவருடைய மூளையையும் கேடுகெட்ட அறிவையும் தான் சிறைவைக்கிறோம்”.

ஷெய்க் அவர்களை உடல்ரீதியாக சித்திரவதை செய்வதைக் கண்டு பொருக்க இயலாத நான் அந்த சிறை அதிகாரியிடம் கேட்டேன், “எதற்காக அந்த நோயா ளியான மனிதரை துன் புறுத்துகிறீர்கள். ஒரு ஊனமுற்றவரை அடித்து துன்பு றுத்துவதன் மூலம் உங்கள் வீரத்தை வெளிப்படுத்துகின்றீர்களா?” என்று. அதற்கு அந்த சிறை அதிகாரி கூறினான், “யார் கூறினார் இவர் நோயாளி என்று. அவருடைய தலையும் மூளையும் ஆரோக்கியமாக வல்லவா இருக் கின்றது” என்று.

சுருக்கமாகக் கூறினால் தான் கொண்ட இலட்சியத்திற்காக எந்த எல்லை வரை செல்லவும் எத்தகைய சித்திரவதைகளையும் தாங்கவும் உறுதிபடைத்த ஷெய்க் அவர்களின் தியாக மனநிலையை எதிரிகள்கூட அங்கீக ரித்தார்கள் என்பதுதான்.

* ஏதேனும் காரியங்களுக்காக ஷெய்க் அவர்களை எதிரிகள், பயமு றுத்தல், சித்திரவதை செய்தல் போன்ற தந்திரங்களைப் பயன்படுத் தியதை உங்களால் நினைவுகூற இயலுமா?

முடியும் என்பது மட்டுமல்ல. ஒன்றிற்கு மேற்பட்ட தடவை சிறை உயரதிகாரி களின் விலை குறைந்த மிரட்டல் தந்திரங்களையும் கேடு கெட்ட ஆசை வார்த்தைகளையும் ஷெய்க் அவர்கள் சந்தித்ததுண்டு. ஹமாஸ் போராளிகள் கடத்திச் சென்ற ஈலாத் ஸெய்பூன் என்ற இஸ்ரேலிய இராணுவ வீரனைப் பற்றிய விபரமளிக்க வேண்டி சிறை அதிகாரிகள் ஷெய்க் அவர்களை நிர்ப்பந் தப்படுத்தினார்கள்.

ஷெய்க் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டில் சிறிது மாற்றம் ஏற்படுத்துமா றும் அவ்வாறு செய்தால் உலகத்தில் அவர் விரும்பும் எந்தப் பகுதியிலும் சுகபோகமாக வாழ்வதற்கு ஏற்ற வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் காட்டினர். ஆனால், எவராலும் அழிக்க இயலாத மன உறுதியுடன் பளிச்சிடும் உறுதியான வார்த்தைகளால் ஷெய்க் அவர்கள் அளித்த பதில் ஒவ்வொரு பலஸ்தீன சகோதரனும் மன தில் பூட்டிப் பாது காக்க வேண்டியவை.

“நான் பலஸ்தீன நாட்டவன். குழந்தைப் பருவம் முதல் இந்தப் புனித பூமியில் நடைபயின்றவன் நான். இந்த மண்ணிலேயே வீர மரணமடைந்து (ஷஹீதாகி) இங்கேயே அடக்கம் செய்யப்படவேண்டுமென்று எப்பொழுதும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் மனதுதான் என்னுடையது. இந்த உலகத்தில் நீங்கள் சுவர்க்க மாகக் கருதும் எப்பகுதிக்கு அழைத்துக் கொண்டு சென்றாலும் நான் எனது சமூகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாரில்லை. உங்களால் நரகமாக்கப்பட்ட இந்தப் பூமிதான் எனக்கு, உங்களது சுவர்க்க பூமியைவிட மிகவும் விருப்பத் திற் குரியது.

சிறைக்கு வெளியேயுள்ள ஓர் அனுபவத்தைக் கூறுகிறேன். சில அமெரிக்க அறபு தலைவர்கள் இஸ்ரேல் உலவுத் துறை வட்டாரங்களின் சதித்திட்டங் களைப் பற்றிய இரகசியத் தகவலை அளித்தார்கள். ஷெய்க் அவர்கள் அமெ ரிக்காவின் உதவிக்கு இவ்வாறு பதில ளித்தார்கள்: “எவரும் எனக்காக வருந்த வேண்டிய தேவையில்லை. தற்காப் புப் போரைப் பற்றிய பூரண அறி வோடுதான் நாங்கள் இந்தப் பணியை ஏற்று செயல்படுத்தத் துவங்கியிருக் கிறோம். நாங்கள் இப்பணியைத் துவக் கிவைத்தது சொந்த நாட்டிற்காக இரத்த சாட்சிகளாக மாறத்தான்”.

தொடர்ந்து அவர் கூறிய வார்த்தைகள் யூத ஸியோனிஸ்டுகளின் காதுகளில் இடிமுழக்கமாக இறங்கக் கூடியவை. பலஸ்தீனிலுள்ள பிஞ்சுக் குழந்தைக ளின் குருதியா உங்கள் வயிற்றுக்கு விருப்பமானது? என்னை மட்டும் எதற் காக இந்தப் பூவுலகில் மீதம் வைத்துள்ளீர்கள்? பிறக்கும் பொழுதே கஷ்டங் களைத் தாங்குவதற்கு விதிக்கப்பட் அந்தக் குழந்தைகளின் ஆன்மா வைக் காட்டிலும் என்னுடைய ஆன்மாவிற்கு மதிப்பொன்றுமில்லை.

நீங்கள் என்னைத்தான் கொல்ல முயல்கின்றீர்கள் என்றால் அதற்காக நீங்கள் சிரமப்படத் தேவையில்லை. உங்கள் இலக்கு நானென்றால் அது ஒருபோதும் தவறாது. என்னுடைய ஒவ்வொரு நகர்வும் எல்லோரும் அறி யும் விதமாகப் பகிரங்கமானது. உங்களுடைய கரங்களால் கொல்லப்பட வேண்டும் என்பதே எனது இறுதி இலட்சியம்.

நாங்கள் நெஞ்சுறுதியின் உடன் பிறப்புக்கள். போராட்டத்தின் தீப் பிழம்புகள் சிதறும் தலைமுறையின் உற்ற நண்பர்கள். தன்மானத்தின் பாதுகாப்பிற்கா கத்தான் போர் செய்யும் உறுதி பூண்டிருக்கிறோம் என்று அமெ ரிக்க அறபு லகத்தோடு கூறுங்கள்.

* தன்னைப் பீடித்திருக்கும் நோய்களோடு ஷெய்க் அவர்கள் எவ்வாறு சிறைக் கொட்டகையில் மன ரீதியான, உடல் ரீதியான சித்திர வதைகளை எதிர் கொண்டார்கள்?

உண்மையில் என்னவென்றால் ஒருநாள் கூட ஷெய்க் அவர்கள் தனக்கு ஏற் படும் சிரமங்கள் குறித்து குறைபட்டுக் கொள்ள மாட்டார்கள். தன்னைப் பின் தொடரும் நோய்களுடனேயே எப்பொழுதும் உதட்டில் புன்சிரிப் போடும் இருப்பார்கள். வெறுப்பு அல்லது பொறுக்க இயலாத தன்மையின் ஒரு அம்சம்கூட அவர்களின் ஜொலிக்கும் முகத்திலோ அல்லது அமைதியான வார்த்தைகளிலோ வெளிப்படாது.

அலை அடங்கிய கடல் போன்ற உள்ளமும், சாந்த கம்பீர முகமும்தான் அவர் களுடைய அடையாளம். உதடுகள் எப்பொழுதும் பிரார்த்தனையிலேயே இருக்கும். அல்குர்ஆன் தான் அவர்களுடைய மொழி. அதன் காரணமாகத் தானோ என்னவோ அவருடைய மார்க்க-அரசியல் நிலைப்பாடுகளில் ஒரு போதும் பிழைகள் நிகழாதது. அதேபோலவே அவர் சோதனைகளை உறுதி யோடு எதிர்கொண்டதும் என்று என்னால் கூற இயலும்.

ஜமாஅத்தாக தொழுவதற்குக் கூட இயலாத ஒரு குறுகிய இடத்தில்தான் நானும் ஷெய்க் அவர்களும் இன்னொரு சகோதரரும் அடைக்கப்பட்டிருந் தோம். வடக்கு பலஸ்தீனில் ஒரு மறைவான தரக்குறைவான சிறைக் கூட மாக இருந்தது அது. உடம்புகளிலுள்ள எழும்புகளைக்கூட துளைக்கும் கடும் குளிர் நிலவும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் போர்த்துவதற்கு ஒரு போர்வைகூட இல்லாமல் அந்த நோயாளியான வயோதிப மனிதர் கழித்தது, ஐந்து மாதங்கள். ஒலிவ் மரங்கள்கூட குளிர்ந்து விறைத்துப் போய் நிற்கும் அந்தத் துன்புறுத்தும் இரவுகளில் கதவுகள்கூட இல்லாத இரும்பு ஜன்னல் களைக் கொண்ட அந்தக் குறுகிய அறையில் தங்குவதற்கு நேர்ந்த பிறகும் ஷெய்க் அவர்கள் எந்தக் குறைகளையும் முறையிடத் தயாரானதில்லை.

அதுமட்டுமல்ல, அந்தச் சிறையில் எங்கள் மூன்றுபேரைத் தவிர மற்ற அனை வருக்கும் போர்வை வழங்கப்பட்டது. ஏனெனில் அவர்கள் யூதர்கள். இதுபற்றி நான் ஷெய்க் அவர்களிடம் “பிற சிறைக்கைதிகளுக்கு போர்வை வழங்கப்பட் டுள்ளது, நமக்கு வழங்கப்படவில்லை. இதனைக் கேட்பது நமது உரிமையல் லவா? என்று கேட்டேன். அதற்கு ஷெய்க் அவர்கள் அளித்த பதில், நாம் வசிப் பது சிறைக் கூடத்தில், நட்சத்திர ஹோட்டலிலல்ல.

இன்னொரு சூழலில் சிறைக் கைதிகளிடம் காட்டுமிராண்டித்தனமான முறை யில் நடந்துகொள்ளும் ஸியோனிஸ்டுகளின் மறுக்கும் நட வடிக்கைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு ஷெய்க் அவர்களிடம் ஒப்புதல் கேட்ட பொழுது ஷெய்க் அவர்கள் கூறினார்கள், “நாம் இருப்பது சிறைக்கூடத்தில். மனிதத் தன்மையை இழந்துவிட்ட எதிரிகளிடம் உரிமை யைக் கோருவது என்பது முட்டாள்த்தனம் என்பதைத் தவிர வேறு என்ன? நீங்கள் உண்ணாவிரதம் இருந்துகொள்ளுங்கள். அதில் நான் கலந்துகொள்ள மாட்டேன்” என்று.

* விசாரணைகளை ஷெய்க் அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்?

விசாரணையின்போது ஷெய்க் அவர்களைப் பின்தொடர எங்களுக்கு அனுமதி யில்லாததால் விசாரணைக் கூண்டில் ஷெய்க் அவர்களின் பதில் எவ்வாறு இருந்தது என்பதை அறிய எங்களால் இயலாதுபோனது. ஆனாலும் விசார ணைக்கு முந்திய இரவில் ஷெய்க் அவர்கள் பூரணமாக விசாரணைக்குத் தயாராவார்கள். தன்மானம் ஜொலிக்கும் முகத்தைக் கொண்டவர்களாக ஷெய்க் அவர்கள் அவ்வேளை களில் திகழ்வார்கள்.

கடினமான மூலநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அதிகமான இரத்தம் வெளி யாகும். மேலும் பொறுக்க இயலாத வேதனையும் அவர்களுக்கு ஏற்படும். இதனால் அவர்கள் சில மாத்திரைகளை உட்கொண்ட பிறகே விசாரணையை சந்திக்கச் செல்வார்கள். அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பிறரின் உதவி தேவைப்படும். ஷெய்க் அவர்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் எதிரிகளிடம் தனக்கு உதவி புரிய அனுமதித்ததே இல்லை.

விசாரணைகளுக்கு முந்திய நாளே பிறரின் உதவி இல்லாமல்தான் இந்த மாத்திரைகளை உட்கொள்வார்கள். அல்லாஹ்வின் எதிரிகளிடமிருந்து ஒரு மிடர் தண்ணீர்கூட வாங்கிக் குடிக்காமல் இருப்பதற்கு விசாரணை தினங்க ளில் நோன்பிருக்கும் ஷெய்க் அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

* ஐந்துமாத சிறையனுபவமானாலும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாட்க ளில் மனதைப் பாதித்த ஏதேனும் நிகழ்வுகள் பற்றிக் கூற இயலுமா?

ஐந்து மாதம் ஷெய்க் அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புக் கிடைத்ததை நான் மிக பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தக் காலக்கட்டத்தில் மறக்கவிய லாப் பல சம்பவங்களும் நடந்தது. ஒரு நாட்காலியில் அமர்ந்து கட்டி லில் சாய்ந்துகொண்டுதான் ஷெய்க் அவர்கள் குர்ஆனை ஓதவும், சிறையில் அபூர்வ மாகக் கிடைக்கும் நூல்களையும் படிப்பார்கள். நூல்களின் பக்கங்களைப் புரட்ட சைகை காண்பிக்கும்பொழுது நான் அதனைப் புரட்டிக் கொடுப்பேன்.

ஒருமுறை நான் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாலும் களைப்பா லும் தூங்கிப் போனேன். திடீரென நான் தூக்கத்திலிருந்து விழித்தபோது நான் கண்ட காட்சி என்னை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. ஷெய்க் அவர்கள் நூலின் பக்கத்தைப் புரட்ட தலையை அசைத்தவாறு தலையையும் நெஞ்சையும் புத்தகத்தின் அருகில் கொண்டு வந்து நாக்கை வெளியில் நீட்டி அதனால் புத்தகத்தின் பக்கத்தைப் புரட்ட முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். இது ஒருபோதும் மறக்கவியலா நிகழ்ச்சியாக இருந்தது.

அக்காட்சியினால் துக்கமும் குற்ற உணர்வும் ஆச்சரியமும் உள்ளத்தில் தோன்றவே நான் ஷெய்க் அவர்களிடம் கேட்டேன், ஏன் உதவிக்கு என்னை எழுப்பவில்லை?

அதற்கு ஷெய்க் அவர்கள் கூறியபதில் அவர்மீது நான் கொண்டிருந்த மதிப்பை பன்மடங்காக்கியது. ஷெய்க் அவர்கள் கூறினார்கள், “எனக்கு சுய மாக செய்ய முடியும் காரியத்தை நான்தான் செய்ய வேண்டுமென்று உறுதி கொண்டுள்ளேன். உங்களுடைய உதவி மட்டும் இல்லாவிட்டாலும் தனியாக எழுந்துநிற்கவும் என்னால் இயலும்”.

இதைகேட்ட எனக்கு சிரிப்பு தோன்றியது. பக்கவாத நோயால் பீடிக்கப்பட்ட, இருகால்களையும் பயன்படுத்த இயலாத அந்த முதியவர் கம்பை ஊன்றிய வாறு எழுந்து நடப்பதும், ஒரு அடியெடுத்து வைக்கும்போதே தரையில் வீழ்வதும் மீண்டும் அதிக ரித்த ஊக்கத்தோடு கம்பை ஊன்றிய வாறு எழுந்து நிற்பதையும் நான் காண்பதுண்டு.

சிறிது காலத்திற்குப் பின் அவருடைய இயக்கத் தோழர்கள் அவருக்கு சக்கர நாட்காலி ஒன்றை வாங்கிக் கொடுத்தார்கள். நோயினால் துன்புற்ற வேளையி லும் சிறையில் கொடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட போதும் அறி வைத் தேடுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதை அந்த முதியவர் எங்களுக்குக் கற்பித்தார்.

நன்றி: விடியல் வெள்ளி

போராளிகளின் மனதில்
போராளிகளின் மனதில்

சிகாகோ பல்கலைகழகத்தில் சர்வதேச உறவுகள் பற்றி பாடம் சொல்லி கொடுப்பவர் ராபர்ட் பேப். இவருடைய தலைமையில் 2003 -– 2005 காலகட்டத்தில் அமெரிக்க அரசு சொல்லிக்கொண்டிருக்கும் தற்கொலை தாக்குதல் சம்பந்தமாக  ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வெளிவந்த உண்மைகள் ஆச்சரியகரமானது. அதிர்ச்சிகரமானது.

அமெரிக்க அரசு கூறிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற தீய கொள்கை காரணமாகத்தான் தற்கொலை தாக்குதல் நடைபெறுகின்றது, அமெரிக்க ராணுவக் கொள்கைகள் காரணமல்ல என்பதை ஆய்வு செய்வதற்காக இது நடத்தப்பட்டது.

கார்னிஜி குழுமம், பெண்டகன் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைப்பு மையம், சிகாகோ பல்கலைகழகம் மற்றும் அர்கான் தேசிய ஆய்வு மையம் ஆகியன இந்த ஆய்வுக்கு பொருளாதார உதவிகள் செய்தன.

பாலஸ்தீனம், இஸ்ரேல், லெபனான், மத்திய கிழக்கு நாடுகள், ஈராக், ஆப்கானிஸ்தான், செச்னியா, காஷ்மீர் மற்றும் இலங்கை ஆகியவை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஆய்வாளர் பேப் 462 தற்கொலை தாக்குதலை நிகழ்த்தியவர்களை இந்த ஆய்வில் எடுத்துக்கொண்டார்.

1982 முதல் 1986 ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் இடம்பெற்றவர்கள் : 71மூ கிறிஸ்தவர்கள், 21மூ கம்யூனிஸ மற்றும் சோசியலிஸவாதிகள் 8மூ இஸ்லாமியவாதிகள்

பொதுவாக தற்கொலை தாக்குதலில் இடம்பெறுபவர்களி;ன் சராசரி வயது 20. இஸ்லாமிய குழுக்களில் பெண்கள் மிகவும் குறைவு. இஸ்லாமிய அடிப்படைவாதம் சில தனி மனிதர்களை கட்டுப்படுத்துவதன் மூலமாக தற்கொலை பயங்கரவாதிகளை குறைத்துள்ளதாக பேப் கூறுகிறார்

லெபனானில் 41 தாக்குதல் நடத்தியவர்களில் 38 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 30 நபர்கள் இவர்கள் கூறும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் எதிரிகள். 3 நபர்களின் கொள்கைகள் பற்றி தெரியவில்லை. 38 நபர்களும் லெபனானை சார்ந்தவர்களே. இத்தாக்குதலில் இடம்பெற்ற 4 பெண்களும் மேற்கத்தேய உடை அணிந்தவர்களாகவும், தலையலங்காரத்துடனும் மேக் அப்புடனும் புகைப்படங்களில் காட்சியளித்துள்ளனர்.

தற்கொலை தாக்குதலில் இடம்பெறுபவர்கள் யாருக்கும் மன வியாதி இருந்ததாக காணமுடியவில்லை. ஆனாலும் 16 நபர்கள் தங்களுக்கு நெருங்;கிய அன்பானவர்களை இழந்ததினால் கவலைக்குள்ளாகி இருந்தவர்கள். அரபு நாட்டை சேர்ந்தவர்கள் மற்றவர்களை விட அதிகம் படித்தவர்களாக இருந்தனர். இவர்கள் அரசியல் மாற்றத்தை விரும்பிய தனிநபர்களாக இருந்துள்ளனர். மதவாத உணர்வுகளை விட அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு இயக்கத்தில் சேர விரும்பியவர்களாகவே இவர்கள் இருந்துள்ளனர்.

மேலும் இந்த ஆய்வு இன்னொரு உண்மையையும் வெளிப்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதை தீவிரவாதம் என அறிவிக்கும் அமெரிக்க அரசு, இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டதே இர்குன் மற்றும் ஹகானா போன்ற தீவிரவாத அமைப்புகளின் துணையுடன்தான் என்பதை வசதியாக மறந்து விடுகிறது.

அண்மையில் ரகசிய அமைப்பான எம் 15 வெளியிட்டுள்ள தகவல்களை சுட்டிக்காட்டி ரிச்சர்ட் நார்டன் டெய்லர் , கார்டியன் பத்திரிகையில் சில செய்திகளை தெரிவித்துள்ளார். யூத தீவிரவாதிகள் கிளமண்ட் அட்லி அரசில் அங்கம் வகித்தவர்களை கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர். பின்னாளில் இஸ்ரேலின் பிரதமராக வந்த மெனாசெம் பெகினே முக மாற்று அறுவை சிகிச்சை செய்து இந்த பயங்கரத்தினை நடத்த திட்டமி;ட்டுள்ளார். இவர் அப்போது இர்குன் அமைப்பின் தலைவராக இருந்தார். 1946 ல் இந்த இர்குன் அமைப்பு ஜெருசலத்தில் உள்ள கிங் டேவிட் ஹோட்டலை தரைமட்டமாக்கியதுடன், ரோமில் இருந்த இங்கிலாந்து தூதரகத்தையும் தாக்கியது.

தற்கொலை தாக்குதலுக்கு அன்னிய ஆக்கிரமிப்பிலிருந்து தாய்நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதே ஆணிவேர் என இந்த ஆய்வு கூறுகிறது. சிஐஏ வின் முன்னாள் பகுப்பாளர் மைக்கேல் சூயர் தெரிவிக்கையில் அமெரிக்கா ஈராக்கின் மீது படையெடுப்பதற்கு முன் அங்கு ஜிஹாதிகள் யாருமில்லை. ஆனால் தற்போது ஆயிரக்கணக்கானோர் உள்ளனர் என கூறுகிறார்.

1978 ல் ஐ.நா. பொதுக்குழு அன்னிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதை அங்கீகரித்துள்ளதோடு இதற்கான ஆயுதப் போராட்டங்களையும் அங்கீகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு செய்யப்படும் அநீதிகளால் அந்த மக்கள் கொதிப்படைந்து தங்களது உயிரையும் தியாகம் செய்ய முன்வருவதாக இந்த குழு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட இஸ்ரேலினால் தங்களது நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதே போல் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தற்கொலை தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

ஸலபிக்களுக்கும் தீவிரவாதத்துக்கும் எந்த விதமான ஆதாரங்களும் இல்லாத நிலையில், புள்ளி விபரங்கள் வளைகுடாவில் அமெரிக்காவின் ராணுவ கொள்கைகளுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பிருப்பதை தெளிவுபடு;த்துகிறது

இஸ்லாமிய அடிப்படைவாதம் உலகை அச்சுறுத்துகிறது என்ற வாதம் முழுக்க முழுக்க கற்பனையானது என்பதை இந்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது.

தீவிரவாதத்தை தடுப்பதற்கு பேப் தலைமையிலான குழு கீழ்கண்ட பரிந்துரைகளை செய்துள்ளது:

1. வளைகுடாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் அமெரிக்கா தனது படையினரை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும்.

2. பாலஸ்தீனத்தில் மீண்டும் அமைதி நிலவுவதற்கு தேவையான முயற்சிகள் எடுக்கப்படுவதோடு அங்கு வாழும் மக்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்பட வேண்டும்.

செய்வார்களா?

- இஸ்லாமிக் வாய்ஸ், மே 2007

நமது கடமை
நமது கடமை

அல்லாஹ் மனிதனை படைத்ததன் நோக்கத்தை பற்றி குறிப்பிடுகிறான்:

ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (திருமறை 51:56)

இதிலிருந்து நமது வாழ்வின் நோக்கமே வணக்கம்தான் என்பது தெளிவாகிறது. சில இபாதத்களை மட்டும் செய்தால் போதும். நான் எனது இறைவனை முழுமையாக வணங்கி விட்டேன் என்ற நமது மனப்பான்மை தவறானது என்பதை இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது.

உதாரணத்திற்கு மிக முக்கிய கடமையான தொழுகையைப்பற்றி அல்லாஹ்;  குறிப்பிடுகிறான்:

நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்.   குர்ஆன் 29:45

இதிலிருந்து தொழுகை நமது வாழ்வு வணக்கமாக மாறுவதற்கான பயிற்சி என்பது தெளிவாகிறது.

நாம் தொழுகையை மட்டும் வணக்கமாக கருதுவோமானால் ஒரு நாளில் அரை மணி முதல் ஒரு மணி நேரம் மட்டுமே நாம் தொழுகைக்காக ஒதுக்குகிறோம். அப்படியென்றால் மற்ற நேரங்களில் அல்லாஹ்வை வணங்குவதற்கு என்ன பொருள்?

தொழுகையில் நாம் எப்படி அல்லாஹ்வை மட்டும் அக்பராக ( மிகப் பெரியவன்) ஏற்று நடக்கிறோமோ அது போல் நாம் நமது மற்ற விவகாரங்களிலும் அல்லாஹ்வை மட்டும் அக்பராக ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது தனிப்பட்ட வாழ்வில், குடும்ப வாழ்வில், வியாபாரத்தில், அரசியலில் , ஆன்மீகத்தில் என அனைத்து விசயங்களிலும் அல்லாஹ்வை அக்பராக ஏற்று அவனுடைய கட்டளைகளுக்கு மட்டும் கீழ்படிந்து நடக்க வேண்டும். இந்த விசயங்களில் அல்லாஹ்வுடைய கட்டளைக்கு  மாற்றமாக நமது மனோஇச்சை, குடும்பத்தவர்,  தோழர்கள், தலைவர்கள் மற்றும் மார்க்கச் சட்டத்திலிருந்து மாறுபடும் இதர கொள்கைகள் போன்றவற்றிற்கு அடிபணிந்து விடக் கூடாது. அடுக்களை முதல் அரசியல் வரை அல்லாஹ்வின் கட்டளைகள்தான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனைத்தானே அல்லாஹ் வணக்கம் என்கிறான்.. அதற்காகத் தானே நம்மையும் ஜின் வர்க்கங்களையும் படைத்தேன் என்றும் சொல்கிறான்..

இதைப்பற்றி நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிடும்போது,

“எவர் தம் விருப்பத்தை நான் கொண்டு வந்த நெறியைப் பின்பற்றும் வண்ணம் அமைத்துக் கொள்ளவில்லையோ – அவர் முழுமையாக ஈமான் கொள்ளவில்லை” என தெளிவுபடுத்துகிறார்கள்.

இதற்கு நாம் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட, இந்த மார்க்கமான இஸ்லாத்தை நிலைநாட்ட பாடுபட வேண்டும். இந்த இகாமத்தே தீன் என்ற மாபெரும் பணியை அல்லாஹ்; நமக்கு கட்டளையாக குறிப்பிடுகிறான்.

நூஹ{க்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால். ”நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து  விடாதீர்கள்” என்பதே (42:13)

இந்த கட்டளையின்படி நாம் செயல்பட முன்வரும்போது நமது வாழ்வு வணக்கமாக மாறும் – இன்ஷா அல்லாஹ். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிராவிலிருந்து வெளியில் வந்ததிலிருந்து அரபுலகம் முழுதும் இந்த மார்க்கம் நிலைநாட்டப்படும் வரை இதற்காக கடுமையாக உழைத்தார்கள். இபாதத்களோடு தங்களது வாழ்வை மட்டுப்படுத்தி கொள்ளாமல் வாழ்க்கையையே இபாதத் ஆக மாற்றி நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.

இந்த மார்க்கத்தை நிலைநாட்டும் பணியில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளது. அதில் முதலாவதாக நாம் நம்மை முற்றிலும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழும் முஸ்லிம்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள். தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். 3:110

என குர்ஆன் குறிப்பிடுவது போல் நன்மையை ஏவி தீமையை தடுக்க கூடியவர்களாக நாம் மாற வேண்டும். நன்மை என்பதற்கு திருக்குர்ஆனின் சிறந்த விரிவுரையாளரான இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் “”லா இலாஹ இல்லல்லாஹ்” என குறிப்பிடுகிறார்கள். எனவே இந்த மார்க்கத்தை பிற சமுதாய மக்களுக்கு தீவிரமாக, நளினமாக நமது சொல்லாலும், செயலாலும் எடுத்து இயம்பும் பணியில் நம்மை நாம் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் நமது கடமையை நிறைவேற்றியவர்களாக, ஈருலக வெற்றியாளர்களாக மாற முடியும்.

அகிலத்தின் அருட்கொடை, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து மக்களும் இஸ்லாத்தை ஏற்று சுவனம் செல்ல வேண்டுமே என மிகவும் கவலைப்பட்டார்கள். அல்லாஹ்வே “அவர்கள் முஃமின்களாகாமல் இருப்பதற்காக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!”(குர்ஆன் 26:3) என கூறும் அளவுக்கு கவலைப்பட்டார்கள். நாமும் இந்த பணியை அதே எண்ணத்துடன், அல்லாஹ்வின் திருப்தியை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செய்ய வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமல்லாத சகோதரனை பார்க்கும்போதும் அவன் நரகத்தில் நின்று கொண்டிருக்கிறான், அவனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சத்திய மார்க்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நாமனைவரும் ஒன்றிணைந்து இந்த மார்க்கத்தை நிலை நாட்டும் பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் போது இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக நாம் ஈருலகிலும் வெற்றி பெறுவோம். வல்ல ரஹ்மான் இதற்கு அருள் புரிவானாக!

நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் வெற்றியாளர்கள்.(குர்ஆன் 3;:139)

நபி (ஸல்)பற்றி நல்லறிஞர்களின் கருத்துக்கள்
நபி  (ஸல்)பற்றி நல்லறிஞர்களின் கருத்துக்கள்:

1. உயர்ந்த குறிக்கோள், குறைவான சிறிய அளவிளான வசதிவாய்ப்புக்கள், பிரமிக்க வைக்கும் பலன்கள் ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்?

புகழ்மிக்க மனிதர்களெல்லாம் மதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாதாயக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது.

ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களோ போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள், அரச வம்சங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டுமே கொள்ளவில்லை. அன்றைய உலகின் மூன்றிலொரு நிலபரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை ஈர்த்தார்கள். வழிபாட்டுத்தலங்களையும் சமய நெறிகளையும் பல்வேறு கருத்துக்களையும்,கொள்கைகளையும், நம்பிக்கைகளையும்,ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களைப் பதித்தார்கள்.

வெற்றியின்போது அவர்கள் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத் தன்மை, தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக் கொண்ட அவரது உயர்நோக்கம், ஆழ்ந்த விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொள்ளாமல் உலகப்பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவர்களின் முடிவேயில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடன் அவர்கள் நடத்திவந்த மெஞ்ஞான உரையாடல்கள், அவர்களின் மரணம், மரணத்திற்குப் பின்னரும் அவர்கள் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர்கள் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடிக் குணம் உடையவர் என்றோ பறைசாற்றிடவில்லை. மாறாக சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவர்களுக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன.

இந்த சமயக்கொள்கை இரண்டு  அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று     இறைவனின் ஒருமை; மற்றொன்று இறைவனுக்கு வடிவம் கிடையாது என்பதுமாகும். முந்தியது இறைவன் என்றால் என்னவென்று எடுத்துரைக்கின்றது. பிந்தியது இறைவன் என்னவாக இல்லை என்பதைத் தெரிவிக்கின்றது. ஒன்று தவறான கடவுள்களைத் தனது பலத்தால் தூக்கியெறிகின்றது; மற்றொன்று பிரச்சார துணையில் ஒரு புதிய கருத்தை உருவாக்க விழைகின்றது.

தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத்தூதர், சட்டநிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுபூர்வமான கொள்கைகள், நம்பிக்கைகளை நிலைநாட்டியவர், மாயைகள் கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரீகத்தை உருவாக்கியளித்த மாமேதை ஒரே ஆன்மீக தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

LAMARTIN> HISTORIE DE LA TURQUIE PARIS 1854.VOL 2.P 276-77

2. அவர் ஒரே நேரத்தில் சீசரும் போப்பும் ஆவார். ஆனால் அவர் போப்பின் பகட்டுகள், ஆடம்பரங்கள் எதுவுமில்லாத போப் ஆவார். சீசரின் பாதுக்காப்புப்படைகள்,எதுமில்லாத சீசர் ஆவார்.

தயார் நிலையிலுள்ள ராணுவமோ, நிலையான நிர்ணயமான வருமானமோ இல்லாமல் (மக்களின் உள்ளங்களையும் பெரும் நிலப்பரப்பையும்) வெறும் இறைவனின் இசைவாணையை, தெய்வீக அனுமதியை மட்டுமே துணையாகக் கொண்டு ஆட்சி புரிந்தாகக் கூறிக்கொள்ளும் உரிமை, மனித வரலாற்றில் எவராவது ஒருவருக்கு இருக்குமானால் அவர் முஹம்மத்(ஸல்) அவர்களேயாவர்; ஏனெனில் ஆட்சியதிகாரம் செலுத்திடத் தேவையான கருவிகள், துணைச்சாதனங்கள் எதுவுமில்லாமலேயே (ஆன்மீக மற்றும் உலக) அதிகாரங்கள் அனைத்தையும் அவர் பெற்றிருந்தார்.

BOSWORTH SMITH> MOHAMMED AND MOHAMMADANISM.

3. உலகின் மிகச் செல்வாக்கு வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவராக முஹம்மத் (ஸல்) அவர்களை நான் தேர்ந்தெடுப்பது வாசகர்கள் சிலருக்கு வியப்பை அளிக்கலாம். சிலர் இதனை கேள்விக்குரியதாகவும் கருதலாம். ஆனால் முஹம்மத்(ஸல்) அவர்கள் தான் உலக வரலாற்றிலேயே     சமயத்துறை, உலகியற் துறை இரண்டிலும் மிகவும் வெற்றிகரமானவராகத் திகழ்ந்த மாமனிதர் ஆவார்.

MICHEL H.HART>THE 100: A RANKING OF MOST INFLUENTIAL PERSONS IN HISTORY> NEW YORK: HART PUBLISHING COMPANY> INC. 1978> P.33.

4. முஹம்மத்(ஸல்) அவர்கள் தமது கொள்கைகளுக்காக எல்லாவித சித்ரவதைகளையும்,கொடுமைகளையும் சகித்துக்கொண்டு அவர்களைத் தமது தலைவராகக் கருதிய அவர்களின் தோழர்களுடைய உயர்ந்த ஒழுக்கப் பண்புகளும் அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும் இவைனைத்தும் அவர்களின் அடிப்படையான நேர்மையை நம்பகமான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன. முஹம்மத்(ஸல்) அவர்களை ஏமாற்றுக்காரராகவும், மோசடிக்காரராகவும் கருதுவது பல பிரச்சனைகளையும் கேள்விகளையும்தான் எழுப்புகிறதே தவிர பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடியதாயில்லை. மேலும், உலக வரலாற்றின் மகத்தான மனிதர்களுள் முஹம்மத்(ஸல்) அவர்களைப் போல் மேற்குலகில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை.

W.MONTGOMERY> MOHAMMED AT MECCA> OXFORD 1932>P.52

5. தமக்கு முன்னால் வாழ்ந்த பெரும் இறைதூதர்கள் அனைவரையும் போலவே முஹம்மத்(ஸல்) அவர்களும் தமது இயலாமையை உணர்ந்து, இறைச்செய்தியை ஏந்திச்சென்று மக்களிடையே எடுத்துரைப்பவராகப் பணியாற்றிட முதலில் தயங்கவே செய்தார். ஆனால் வானவர், ஓதுவீராக! என்று கட்டளையிட்டார். நாம் அறிந்த வரை முஹம்மத்(ஸல்) அவர்கள் எழுதவோ, படிக்கவோ இயலாதவராகவேயிருந்தார். பூமியின் ஒரு பெரும் பகுதியில்  புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியிருந்த இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் பேரண்டத்தின் இறைவன் ஒருவனே! என்கிற சொற்களை அவர் அப்படியே எடுத்துக் கூறலானார்.

எல்லா விசயங்களிலும் முஹம்மத்(ஸல்) அவர்கள் மிகவும் செயல்பூர்வமானவர்களாய் நடைமுறைப்படுத்திட உகந்த முறைகளில் செயல்படக் கூடியவர்களாய்த் திகழ்ந்தார்கள். அவர்களின் அன்பு மகனார் இப்றாஹீம் மரணமடைந்தபொழுது கிரகணம் ஒன்று நிகழ்ந்தது. உடனே இப்றாஹீமின் மரணத்திற்காக இறைவனே தனிப்பட்டமுறையில் துக்கம் தெரிவிக்கிறான் என்னும் வதந்திகள் எழுந்தன. ஆனால் முஹம்மத்(ஸல்) அவர்களோ, கிரகணம் பிடிப்பது ஓர் இயற்கை நிகழ்வாகும்.   இத்தகைய விசயங்களை ஒரு மனிதரின் மரணத்துடனோ பிறப்புடனோ தொடர்புப்படுத்திப் பார்ப்பது மூட நம்பிக்கையாகும் என்று அறிவித்தார்.

முஹம்மத்(ஸல்) அவர்களின் மரணத்தின் போது கூட அவரைக் கடவுளாக்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அவருக்குப்பின் அவரது நிர்வாக வாரிஸாக வரவிருந்த அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் சமயவரலாற்றிலேயே தலைசிறந்த சொற்பொழிவு ஒன்றின் வாயிலாக இந்த மனவியாதியை முளையிலேயே கிள்ளியெறிந்து விட்டார்.

அந்த சொற்பொழிவின் முக்கிய பகுதி: உங்களில் எவரேனும் இதுவரை முஹம்மத்(ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருப்பாயின் அவர்கள் முஹம்மத்(ஸல்) இறந்துவிட்டார்கள் என்பதை தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்; நீங்கள் இறைவனைத்தான் வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்றால் அவன் என்றும் வாழ்பவன்; நிலைத்தவன் என்பதை அழுத்தமாக அறிந்துக்கொள்ளுங்கள்.

JAMES A MICHENER ISLAM: THE MISUNDERSTOOD RELIGION’ IN THE READER’S DIGEST(AMERICAN EDITION)IN MAY> 1955>PP.68.70.

6. அவர் தமது மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தது வியப்புக்குரியதல்ல. மாறாக அது என்றும் நீடித்து நிலைத்திருக்கும் பாங்குதான் வியப்புக்குரியதொன்றாகும் மக்கா நகரிலும், மதீனா நகரிலும் அவர் வடிவளித்த இஸ்லாத்தின் அதே அசல்வடிவம் தூய்மை கெடாமல்,மாற்றப்படாமல்,திரிக்கப்படாமல் பன்னிரண்டு நூற்றாண்டுகளில் நடந்தேறிய புரட்சிகள் பலவற்றுக்குப் பின்னரும் இன்றுவரை இந்திய, ஆப்பிரிக்க, துருக்கியப் பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது. சமயத்தைக் குறித்து, கற்பனை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தோட்டங்களிலிருந்து முஹம்மதியர்கள் ஒதுங்கியே நின்றனர். அவற்றை அடியோடு கிள்ளி எறிந்தும்விட்டார்கள்.

நான் ஒரே இறைவனின் மீது நம்பிக்கை கொள்கிறேன். முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராவார்கள்’ என்பதுதான் இஸ்லாத்தின் முன்மாதிரியான மாறுபாடற்ற ஒரே விதமான பறைசாற்றலாகும். ஒருபுறம், கடவுள் பற்றிய அறிவார்ந்த கருத்தோட்டத்தின்     மதிப்பு கண்ணுக்குப் புலப்படும் உயிரினங்கள் சிலைகள் மற்றும் பொருள்களின் அளவுக்கு குறைக்கப்பட்டதில்லை. இறைத்தூதருக்கு அளிக்கப்பட்ட  உயர்மதிப்புகள் மனிதர் என்கிற அந்தஸ்ததை தாண்டி (கடவுள் என்கிற அளவிற்கு) உயர்த்தப்பட்டதில்லை. அவர் அளித்துவிட்டுச்சென்ற சிரஞ்சீவியான கட்டளைகள் அவரைப் பின்பற்றுவோர் அவருக்குக் காட்டும் நன்றியுணர்வை பகுத்தறிவு மற்றும் சமயத்தின் எல்லைகளுக்குள் கட்டுபடுத்தி(மிகைப்படுத்த விடாமல் தடுத்து) வைத்திருக்கின்றன.

EDWARD GIBBON AND SIMON OCKLAY> HISTORY OF THE SARACEN EMPIRE>LON>DON> 1870.P.54.

7. மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்டபோது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத்தந்தது வாள் பலமல்ல என்பதை முன் எப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன்.

நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக கருதி நடந்து கொள்ளும் உயர்பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணிக்காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள்; இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல.

YOUNG INDIA> QUOTED IN THE LIGHT> LAHORE> FOR  16TH SEPTEMBER 1924>

MAHATMA GANDHI.

8. அனைத்துலக சகோதரத்துவம், மனித இன சமத்துவம் முஹம்மத்(ஸல்) அவர்கள் பறைசாற்றிய கொள்கைகள் மனித சமுதாயத்தின் சமூக முன்னேற்றத்திற்கு மாபெரும் தேவைகளை ஆற்றியிருப்பதை எடுத்துரைக்கின்றன. பெரும்     சமயநெறிகள் அனைத்தும் இதே கொள்கையை போதித்திருக்கின்றன. ஆனால் இஸ்லாத்தின் தூதர் இந்தக் கொள்கையை நடைமுறை வாழ்வில் செயல்படுத்திக் காட்டினார் அதன் மதிப்பு முழுமையாக உணரப்பட வேண்டும். அதன் சாதனை ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். உலக மக்களின் மனசாட்சி விழித்தெழுந்துவிட்டால் இனமாச்சரியங்கள் மறைந்துவிடும்; மனித இன சகோதரத்துவக் கொள்கை நடைமுறைக்கு வந்துவிடும்.

PROF. RAMAKRISHNA RAO> MOHAMMAD THE PROPHET OF ISLAM>PAGE 7.

9. அரேபியாவின் இந்தத் தூதருடைய வாழ்க்கையும்,    ஒழுக்கப்பண்புகளையும் தூய நடத்தையையும் படிப்பவர்கள் அவர்  வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத்தூதர்களில் ஒருவரான இறுதித்தூதரைக் குறித்து   உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான் பலருக்கும் தெரிந்த பல விசயங்களையே சொல்கிறேன் என்றாலும், நானேஅவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்பப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அந்த அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும் புதிய ஒரு மரியாதையும் உணர்வும் ஏற்படுவதை நான்   உணர்கிறேன்.

ANNIE BESANT> THE LIFE AND TEACHINGS OF MUHAMMED 1932>P.4.

நோன்பின் அருட்கொடை
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

நோன்பின் அருட்கொடை

மூலம் : அஹ்மது ஷாக்கிர்

தமிழில் : நெல்லி. அஹு நர்கீஸ்

நோன்பின் மாதமாகிய ரமலான் கணக்கிட இயலா எண்ணற்ற அருட்கொடைகள் நிரம்பியதாய் உள்ளது.அதன் முக்கியத்துவம் புரிந்தவர்கள் வருடம் முழுவதும் ரமலான் மாதமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவர்.முழு நம்பிக்கையுடனும்,எதிர்பார்ப்புகளுடனும் நோன்பு நோற்கும் முஸ்லீம்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருள்களை பொழிகிறான்.

ரமலானில் நோற்கப்படும் நோன்பின் பயன்கள் வகைப்படுத்தப்பட்டு அதன் பயன்கள் மட்டும் சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1.தக்வா:  இது கீழ்காண்பவற்றை உள்ளடக்கியது.

*       எந்நிலையிலும் இறைவனுக்கு பயப்படல்.

*       இறைவனால் அருளப்பட்டதை நடைமுறைப்படுத்தல்.

*       உலகில் தனக்கு இறைவனால் கொடுக்கப்பட்டதை ஏற்று நன்றி செலுத்தல்.

*      மறுமை வாழ்வுக்கு தயார்படுத்தி கொள்ளல்.

*       சுய கட்டுப்பாடு.

*       சுய பரிசோதனை.

*       இச்சைகளை கட்டுப்படுத்தல்.

மேற் காண்பவற்றை ஏற்று நடைமுறைப்படுத்தும் போது,தன் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வில் தக்வாவை  கொண்டு வர முடியும்.

2.பாதுகாப்பு:

·         ஒழுக்கக்கேடுகளிலிருந்து தவிர்ந்து கொள்ளல்.

·         உணர்வுகளை கட்டுப்படுத்தல்.

·         தேவையற்ற,வீணான விஷயங்களை விட்டு ஒதுங்கியிருத்தல்.

·         அனைத்து வித மக்ரூஹ்/ஹராமான விஷயங்களை விட்டு விலகி இருத்தல்.

மேற்கண்டவைகளை வாழ்வில் கடைபிடிக்கும் போது நோன்பு அவனின் தீய செயல்களிலிருந்து சமுதாயத்துக்கு பாதுகாப்பு அளித்து அவனை சிறந்த மனிதனாக மாற்றுகிறது.

3.குர்ஆன் அருளப்படல்:

குர்ஆன் ரமலானில் தான் இறக்கியருளப்பட்டது.குர்ஆனாகிறது;

*         மனித குலத்திற்கு ஓர் வழிகாட்டி.

*         நன்மை,தீமை பிரித்தறிவிக்கக் கூடியது.

*         முந்தைய வேதங்களின் உண்மை கருத்துக்களின் தொகுப்பும்

பாதுகாக்கப்பட்டதுமாகும்.

*         முஃமின்களுக்கு ஓர் நற்செய்தி.

*         நேர்வழி காட்டக் கூடியது.

*         இறைவனின் பெருங்கொடை.

*         நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதம்.

4.சுவனத்து வாயில்கள் திறந்து வைக்கப்படுகின்றன.

5.நரக வாயில்கள் மூடி வைக்கப்படுகின்றன.

6.ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன.

7.நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடனும் நோன்பு வைத்தவர்களின் பாவங்கள்

அல்லாஹ்வால் மன்னிக்கப்படுகின்றன.

8.ரய்யான் எனும் வாயில்:

நோன்பு நோற்றவர்கள் மட்டுமே சுவனத்தின் ரய்யான் எனும் வாயிலின்

உள்ளே நுழைய முடியும்.

9.இரு வகை மகிழ்ச்சி:

நோன்பாளிகள் இரண்டு தடவை மகிழ்ச்சி அடைகிறார்கள்.அவை;

நோன்பு திறக்கும் போது.

அல்லாஹ்வை சந்திக்கும் போது.

10.வாய் நாற்றம்:

இறுதி தீர்ப்பு நாளில் அல்லாஹ்விடத்தில் நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாசனை (நாற்றம்) கஸ்தூரியின் மணத்தை விட பிரியமானதாய் இருக்கும்.

11.ரமலான்-ரமலான்:

யார் இரண்டாண்டுகள் தொடர்ந்து தூய்மையான எண்ணத்துடன் நோன்பு நோற்கிறாரோ இரண்டு நோன்புக்கும் இடைப்பட்ட காலத்தில் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னிக்கிறான்.

12.நன்மைகள் பன்மடங்காக்கப்படல்:

ரமலானில் புரியும் நற்செயல்களுக்கு 10,70,700 மடங்கு மற்றும் அதற்க்கு மேலான நன்மைகள் கிடைக்கின்றன.

13.பிறருக்கு உணவளித்தல்:

நோன்பாளிகள் நோன்பு திறக்க தேவையான ஏற்பாடுகள் செய்பவர்களுக்கும்,ரமலானில் கடைசி பத்து நாட்களில் தேவையுடையோர்க்கும் வறியவருக்கும் உணவளிப்பவர்க்கு அல்லாஹ் நோன்பாளிகளுக்கு கொடுக்கும் நன்மைகளை போன்று கொடுக்கிறான்.

14.நோன்பாளிகள் நன்மையில் நிலைத்திருப்பர்:

நோன்பு திறப்பதை விரைவாக செய்யும் வரை.

ஸஹ்ரை தாமதப்படுத்தும் வரை.

15.ஸஹ்ரில் விளையும் நன்மை:

ஸஹ்ர் உணவில் பரக்கத்.

இரவு நேர தொழுகை.

குர்ஆன் ஓதுதல்.

பஜ்ர் ஜமாஅத்துடன் தொழல்.

16.தராவீஹ் தொழுகை:

யார் பயபக்தியுடனும் தூய்மையான உள்ளத்துடனும் தராவீஹ் தொழுகையை

(இரவு நேர தொழுகை) நிறைவேற்றுகிறாரோ அவரின் முந்தைய பாவங்கள்

மன்னிக்கப்படும்.

17.பரிந்துரை:

நோன்பாளிக்கு இவற்றின் பரிந்துரை கிடைக்கும்.

நோன்பு

குர்ஆன்

18.இஃதிகாப்:

கடைசி பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பவர்களுக்கு அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வழங்குகிறான்.

19.லைலத்துல் கத்ர்:

இந்த இரவில் பயபக்தியுடன் இறைவனை வணங்குபவர்களுக்கு கிடைப்பவை

·         பாவங்கள் மன்னிக்கப்படல்.

·          ஆயிரம் மாதங்களை விட சிறந்தது.

·          இறைவனை நினைவு கூறல்.

·          திருமறையை ஓதுதல்.

·          மறுமையில் தரஜாக்கள் உயர்த்தப்படல்.

20.ஸதக்கத்துல் பித்ர்:

ஏழை எளியோருக்கு வழங்கப்படும் ஸதக்கத்துல் பித்ரின்  மூலம் ஏராளமான பயன்கள் கிடைக்கின்றன.

உளத் தூய்மை.

தேவையுடையோர்க்கு உதவுதல்.

மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளல்.

மனித உறவுகளை வலுப்படுத்தல்.

சமூகத்தை மேம்படுத்தல்.

21.ஜகாத்:

ஜகாத்தின் தன்மைகளில் சில

தூய்மை.

செல்வத்தில் பரக்கத்.

பொருளாதார மேம்பாடு.

செல்வம் பங்கிடப்படல்.

வறுமை ஒழிப்பு.

22.ஈதுல் பித்ர்:

மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள மற்றும் சகோதரத்துவத்தை வலுவாக்கி கொள்ள ஒரு வாய்ப்பு.

23.துஆ ஏற்கப்படல்:

நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் துஆ இறைவனால் அங்கீகரிக்கப்படுகிறது.

24.உம்ரா:

ரமலானில் உம்ரா செய்வது பெருமானார் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்கு ஒப்பானது.

25.சில சரித்திர வெற்றிகள்:

ரமலானில் நிறைய வெற்றிகளை முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தந்துள்ளான்.

பத்ர் போர்.

அகழ் போர்.

மக்கா வெற்றி.

தபூக் போர்.

ஐரோப்பாவில் தாரிக் பின் ஜியாத் ஆட்சியை பிடித்தல்.

ஜெருசலத்தை கிறிஸ்தவர்களிடமிருந்து ஸலாவுத்தீன் அய்யூபி மீட்டல்.