அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
நோன்பின் அருட்கொடை
மூலம் : அஹ்மது ஷாக்கிர்
தமிழில் : நெல்லி. அஹு நர்கீஸ்
நோன்பின் மாதமாகிய ரமலான் கணக்கிட இயலா எண்ணற்ற அருட்கொடைகள் நிரம்பியதாய் உள்ளது.அதன் முக்கியத்துவம் புரிந்தவர்கள் வருடம் முழுவதும் ரமலான் மாதமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவர்.முழு நம்பிக்கையுடனும்,எதிர்பார்ப்புகளுடனும் நோன்பு நோற்கும் முஸ்லீம்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருள்களை பொழிகிறான்.
ரமலானில் நோற்கப்படும் நோன்பின் பயன்கள் வகைப்படுத்தப்பட்டு அதன் பயன்கள் மட்டும் சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1.தக்வா: இது கீழ்காண்பவற்றை உள்ளடக்கியது.
* எந்நிலையிலும் இறைவனுக்கு பயப்படல்.
* இறைவனால் அருளப்பட்டதை நடைமுறைப்படுத்தல்.
* உலகில் தனக்கு இறைவனால் கொடுக்கப்பட்டதை ஏற்று நன்றி செலுத்தல்.
* மறுமை வாழ்வுக்கு தயார்படுத்தி கொள்ளல்.
* சுய கட்டுப்பாடு.
* சுய பரிசோதனை.
* இச்சைகளை கட்டுப்படுத்தல்.
மேற் காண்பவற்றை ஏற்று நடைமுறைப்படுத்தும் போது,தன் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வில் தக்வாவை கொண்டு வர முடியும்.
2.பாதுகாப்பு:
· ஒழுக்கக்கேடுகளிலிருந்து தவிர்ந்து கொள்ளல்.
· உணர்வுகளை கட்டுப்படுத்தல்.
· தேவையற்ற,வீணான விஷயங்களை விட்டு ஒதுங்கியிருத்தல்.
· அனைத்து வித மக்ரூஹ்/ஹராமான விஷயங்களை விட்டு விலகி இருத்தல்.
மேற்கண்டவைகளை வாழ்வில் கடைபிடிக்கும் போது நோன்பு அவனின் தீய செயல்களிலிருந்து சமுதாயத்துக்கு பாதுகாப்பு அளித்து அவனை சிறந்த மனிதனாக மாற்றுகிறது.
3.குர்ஆன் அருளப்படல்:
குர்ஆன் ரமலானில் தான் இறக்கியருளப்பட்டது.குர்ஆனாகிறது;
* மனித குலத்திற்கு ஓர் வழிகாட்டி.
* நன்மை,தீமை பிரித்தறிவிக்கக் கூடியது.
* முந்தைய வேதங்களின் உண்மை கருத்துக்களின் தொகுப்பும்
பாதுகாக்கப்பட்டதுமாகும்.
* முஃமின்களுக்கு ஓர் நற்செய்தி.
* நேர்வழி காட்டக் கூடியது.
* இறைவனின் பெருங்கொடை.
* நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதம்.
4.சுவனத்து வாயில்கள் திறந்து வைக்கப்படுகின்றன.
5.நரக வாயில்கள் மூடி வைக்கப்படுகின்றன.
6.ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன.
7.நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடனும் நோன்பு வைத்தவர்களின் பாவங்கள்
அல்லாஹ்வால் மன்னிக்கப்படுகின்றன.
8.ரய்யான் எனும் வாயில்:
நோன்பு நோற்றவர்கள் மட்டுமே சுவனத்தின் ரய்யான் எனும் வாயிலின்
உள்ளே நுழைய முடியும்.
9.இரு வகை மகிழ்ச்சி:
நோன்பாளிகள் இரண்டு தடவை மகிழ்ச்சி அடைகிறார்கள்.அவை;
நோன்பு திறக்கும் போது.
அல்லாஹ்வை சந்திக்கும் போது.
10.வாய் நாற்றம்:
இறுதி தீர்ப்பு நாளில் அல்லாஹ்விடத்தில் நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாசனை (நாற்றம்) கஸ்தூரியின் மணத்தை விட பிரியமானதாய் இருக்கும்.
11.ரமலான்-ரமலான்:
யார் இரண்டாண்டுகள் தொடர்ந்து தூய்மையான எண்ணத்துடன் நோன்பு நோற்கிறாரோ இரண்டு நோன்புக்கும் இடைப்பட்ட காலத்தில் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னிக்கிறான்.
12.நன்மைகள் பன்மடங்காக்கப்படல்:
ரமலானில் புரியும் நற்செயல்களுக்கு 10,70,700 மடங்கு மற்றும் அதற்க்கு மேலான நன்மைகள் கிடைக்கின்றன.
13.பிறருக்கு உணவளித்தல்:
நோன்பாளிகள் நோன்பு திறக்க தேவையான ஏற்பாடுகள் செய்பவர்களுக்கும்,ரமலானில் கடைசி பத்து நாட்களில் தேவையுடையோர்க்கும் வறியவருக்கும் உணவளிப்பவர்க்கு அல்லாஹ் நோன்பாளிகளுக்கு கொடுக்கும் நன்மைகளை போன்று கொடுக்கிறான்.
14.நோன்பாளிகள் நன்மையில் நிலைத்திருப்பர்:
நோன்பு திறப்பதை விரைவாக செய்யும் வரை.
ஸஹ்ரை தாமதப்படுத்தும் வரை.
15.ஸஹ்ரில் விளையும் நன்மை:
ஸஹ்ர் உணவில் பரக்கத்.
இரவு நேர தொழுகை.
குர்ஆன் ஓதுதல்.
பஜ்ர் ஜமாஅத்துடன் தொழல்.
16.தராவீஹ் தொழுகை:
யார் பயபக்தியுடனும் தூய்மையான உள்ளத்துடனும் தராவீஹ் தொழுகையை
(இரவு நேர தொழுகை) நிறைவேற்றுகிறாரோ அவரின் முந்தைய பாவங்கள்
மன்னிக்கப்படும்.
17.பரிந்துரை:
நோன்பாளிக்கு இவற்றின் பரிந்துரை கிடைக்கும்.
நோன்பு
குர்ஆன்
18.இஃதிகாப்:
கடைசி பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பவர்களுக்கு அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வழங்குகிறான்.
19.லைலத்துல் கத்ர்:
இந்த இரவில் பயபக்தியுடன் இறைவனை வணங்குபவர்களுக்கு கிடைப்பவை
· பாவங்கள் மன்னிக்கப்படல்.
· ஆயிரம் மாதங்களை விட சிறந்தது.
· இறைவனை நினைவு கூறல்.
· திருமறையை ஓதுதல்.
· மறுமையில் தரஜாக்கள் உயர்த்தப்படல்.
20.ஸதக்கத்துல் பித்ர்:
ஏழை எளியோருக்கு வழங்கப்படும் ஸதக்கத்துல் பித்ரின் மூலம் ஏராளமான பயன்கள் கிடைக்கின்றன.
உளத் தூய்மை.
தேவையுடையோர்க்கு உதவுதல்.
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளல்.
மனித உறவுகளை வலுப்படுத்தல்.
சமூகத்தை மேம்படுத்தல்.
21.ஜகாத்:
ஜகாத்தின் தன்மைகளில் சில
தூய்மை.
செல்வத்தில் பரக்கத்.
பொருளாதார மேம்பாடு.
செல்வம் பங்கிடப்படல்.
வறுமை ஒழிப்பு.
22.ஈதுல் பித்ர்:
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள மற்றும் சகோதரத்துவத்தை வலுவாக்கி கொள்ள ஒரு வாய்ப்பு.
23.துஆ ஏற்கப்படல்:
நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் துஆ இறைவனால் அங்கீகரிக்கப்படுகிறது.
24.உம்ரா:
ரமலானில் உம்ரா செய்வது பெருமானார் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்கு ஒப்பானது.
25.சில சரித்திர வெற்றிகள்:
ரமலானில் நிறைய வெற்றிகளை முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தந்துள்ளான்.
பத்ர் போர்.
அகழ் போர்.
மக்கா வெற்றி.
தபூக் போர்.
ஐரோப்பாவில் தாரிக் பின் ஜியாத் ஆட்சியை பிடித்தல்.
ஜெருசலத்தை கிறிஸ்தவர்களிடமிருந்து ஸலாவுத்தீன் அய்யூபி மீட்டல்.