போராளிகளின் மனதில்

போராளிகளின் மனதில்

சிகாகோ பல்கலைகழகத்தில் சர்வதேச உறவுகள் பற்றி பாடம் சொல்லி கொடுப்பவர் ராபர்ட் பேப். இவருடைய தலைமையில் 2003 -– 2005 காலகட்டத்தில் அமெரிக்க அரசு சொல்லிக்கொண்டிருக்கும் தற்கொலை தாக்குதல் சம்பந்தமாக  ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வெளிவந்த உண்மைகள் ஆச்சரியகரமானது. அதிர்ச்சிகரமானது.

அமெரிக்க அரசு கூறிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற தீய கொள்கை காரணமாகத்தான் தற்கொலை தாக்குதல் நடைபெறுகின்றது, அமெரிக்க ராணுவக் கொள்கைகள் காரணமல்ல என்பதை ஆய்வு செய்வதற்காக இது நடத்தப்பட்டது.

கார்னிஜி குழுமம், பெண்டகன் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைப்பு மையம், சிகாகோ பல்கலைகழகம் மற்றும் அர்கான் தேசிய ஆய்வு மையம் ஆகியன இந்த ஆய்வுக்கு பொருளாதார உதவிகள் செய்தன.

பாலஸ்தீனம், இஸ்ரேல், லெபனான், மத்திய கிழக்கு நாடுகள், ஈராக், ஆப்கானிஸ்தான், செச்னியா, காஷ்மீர் மற்றும் இலங்கை ஆகியவை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஆய்வாளர் பேப் 462 தற்கொலை தாக்குதலை நிகழ்த்தியவர்களை இந்த ஆய்வில் எடுத்துக்கொண்டார்.

1982 முதல் 1986 ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் இடம்பெற்றவர்கள் : 71மூ கிறிஸ்தவர்கள், 21மூ கம்யூனிஸ மற்றும் சோசியலிஸவாதிகள் 8மூ இஸ்லாமியவாதிகள்

பொதுவாக தற்கொலை தாக்குதலில் இடம்பெறுபவர்களி;ன் சராசரி வயது 20. இஸ்லாமிய குழுக்களில் பெண்கள் மிகவும் குறைவு. இஸ்லாமிய அடிப்படைவாதம் சில தனி மனிதர்களை கட்டுப்படுத்துவதன் மூலமாக தற்கொலை பயங்கரவாதிகளை குறைத்துள்ளதாக பேப் கூறுகிறார்

லெபனானில் 41 தாக்குதல் நடத்தியவர்களில் 38 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 30 நபர்கள் இவர்கள் கூறும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் எதிரிகள். 3 நபர்களின் கொள்கைகள் பற்றி தெரியவில்லை. 38 நபர்களும் லெபனானை சார்ந்தவர்களே. இத்தாக்குதலில் இடம்பெற்ற 4 பெண்களும் மேற்கத்தேய உடை அணிந்தவர்களாகவும், தலையலங்காரத்துடனும் மேக் அப்புடனும் புகைப்படங்களில் காட்சியளித்துள்ளனர்.

தற்கொலை தாக்குதலில் இடம்பெறுபவர்கள் யாருக்கும் மன வியாதி இருந்ததாக காணமுடியவில்லை. ஆனாலும் 16 நபர்கள் தங்களுக்கு நெருங்;கிய அன்பானவர்களை இழந்ததினால் கவலைக்குள்ளாகி இருந்தவர்கள். அரபு நாட்டை சேர்ந்தவர்கள் மற்றவர்களை விட அதிகம் படித்தவர்களாக இருந்தனர். இவர்கள் அரசியல் மாற்றத்தை விரும்பிய தனிநபர்களாக இருந்துள்ளனர். மதவாத உணர்வுகளை விட அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு இயக்கத்தில் சேர விரும்பியவர்களாகவே இவர்கள் இருந்துள்ளனர்.

மேலும் இந்த ஆய்வு இன்னொரு உண்மையையும் வெளிப்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதை தீவிரவாதம் என அறிவிக்கும் அமெரிக்க அரசு, இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டதே இர்குன் மற்றும் ஹகானா போன்ற தீவிரவாத அமைப்புகளின் துணையுடன்தான் என்பதை வசதியாக மறந்து விடுகிறது.

அண்மையில் ரகசிய அமைப்பான எம் 15 வெளியிட்டுள்ள தகவல்களை சுட்டிக்காட்டி ரிச்சர்ட் நார்டன் டெய்லர் , கார்டியன் பத்திரிகையில் சில செய்திகளை தெரிவித்துள்ளார். யூத தீவிரவாதிகள் கிளமண்ட் அட்லி அரசில் அங்கம் வகித்தவர்களை கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர். பின்னாளில் இஸ்ரேலின் பிரதமராக வந்த மெனாசெம் பெகினே முக மாற்று அறுவை சிகிச்சை செய்து இந்த பயங்கரத்தினை நடத்த திட்டமி;ட்டுள்ளார். இவர் அப்போது இர்குன் அமைப்பின் தலைவராக இருந்தார். 1946 ல் இந்த இர்குன் அமைப்பு ஜெருசலத்தில் உள்ள கிங் டேவிட் ஹோட்டலை தரைமட்டமாக்கியதுடன், ரோமில் இருந்த இங்கிலாந்து தூதரகத்தையும் தாக்கியது.

தற்கொலை தாக்குதலுக்கு அன்னிய ஆக்கிரமிப்பிலிருந்து தாய்நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதே ஆணிவேர் என இந்த ஆய்வு கூறுகிறது. சிஐஏ வின் முன்னாள் பகுப்பாளர் மைக்கேல் சூயர் தெரிவிக்கையில் அமெரிக்கா ஈராக்கின் மீது படையெடுப்பதற்கு முன் அங்கு ஜிஹாதிகள் யாருமில்லை. ஆனால் தற்போது ஆயிரக்கணக்கானோர் உள்ளனர் என கூறுகிறார்.

1978 ல் ஐ.நா. பொதுக்குழு அன்னிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதை அங்கீகரித்துள்ளதோடு இதற்கான ஆயுதப் போராட்டங்களையும் அங்கீகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு செய்யப்படும் அநீதிகளால் அந்த மக்கள் கொதிப்படைந்து தங்களது உயிரையும் தியாகம் செய்ய முன்வருவதாக இந்த குழு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட இஸ்ரேலினால் தங்களது நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதே போல் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தற்கொலை தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

ஸலபிக்களுக்கும் தீவிரவாதத்துக்கும் எந்த விதமான ஆதாரங்களும் இல்லாத நிலையில், புள்ளி விபரங்கள் வளைகுடாவில் அமெரிக்காவின் ராணுவ கொள்கைகளுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பிருப்பதை தெளிவுபடு;த்துகிறது
இஸ்லாமிய அடிப்படைவாதம் உலகை அச்சுறுத்துகிறது என்ற வாதம் முழுக்க முழுக்க கற்பனையானது என்பதை இந்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது.

 தீவிரவாதத்தை தடுப்பதற்கு பேப் தலைமையிலான குழு கீழ்கண்ட பரிந்துரைகளை செய்துள்ளது:

1. வளைகுடாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் அமெரிக்கா தனது படையினரை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும்.

2. பாலஸ்தீனத்தில் மீண்டும் அமைதி நிலவுவதற்கு தேவையான முயற்சிகள் எடுக்கப்படுவதோடு அங்கு வாழும் மக்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்பட வேண்டும்.

செய்வார்களா?

 - இஸ்லாமிக் வாய்ஸ், மே 2007

This entry was posted in கருத்தாக்கங்கள் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>