படகு வீடு கட்டுகிற வரை பத்திரமாய் இரு!
வலம்புரி ஜான்
இங்கே
நீதிதேவதையின் சிலை
இற்றுப் போய்
இருபது வருடங்களாகின்றன
பறப்பவைகள் கூட
எச்சம் போடுவதில்லை இதன் மீது
பாறையில் விதைத்தோம் என்கிற
பழி வந்து விடுமென்று.
இந்தச் சிலைக் கண்ணைக்
கட்டிக் கொண்டிருப்பதாகக்
கதை சொல்கிறார்கள்
குஜராத்தில் கூன் விழுந்தோர்! Continue reading →
அன்பு நண்பனுக்கு
மௌலானா அஸத் கீலானி
அன்பு நண்பா,
என்ன படிக்க வேண்டும் என்று கேட்கிறாய்…!
குர்ஆன்தான். குர்ஆனிலும் மறுமை குறித்தும், மறுமை நாளின் நிலைமைகள் பற்றியும் விவரிக்கிற வசனங்களைத் திரும்பத் திரும்ப ஓது. அவற்றின் பொருளை வாசி. அவற்றுக்கு அறிஞர்கள் கொடுத்துள்ள வாசகங்களை ஆய்ந்து படி. நபிமொழிகளில் கிதாபுல் ரகாக் பகுதியை வாசி. இவற்றோடு அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாற்றையும் நபித்தோழர்களின் சீரிய வரலாற்றையும் வாசி. இவை யாவும் உன்னை 1400 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த சமூகச் சூழலுக்கே கொண்டு சென்று விடும். உள்ளம் புத்துணர்வு பெறும். Continue reading →
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
பாபரி பள்ளிவாசலை விட்டுக்கொடுத்து விடலாமா?

நீண்ட நெடிய காலமாக பாபரி பள்ளிவாசலை மூடி வைத்து அதனுள் சிலைகளை வைத்தார்கள். அதன் பின்னர் பூஜைக்காக பள்ளிவாசலைத் திறந்து விட்டார்கள். பின்னர் பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கினார்கள். தொடர்கின்றார்கள் அந்த இடத்தில் கோவில் கட்டும் முயற்சியை !
இத்தனை நிகழ்ச்சிகளுக்கும் உறுதுணையாய் நின்றது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு. பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த நிவாரணமும் முஸ்லிம்களுக்குத் தென்படவில்லை. Continue reading →
Posted in புத்தகங்கள்
|
Tagged பாபரி
|
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
| பாபரி மஸ்ஜிதுக்காக உங்களின் பங்களிப்பு என்ன? |
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித்துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்?
திருக் குர்ஆன் 2:114
அன்புச் சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு,
நீங்கள் ஒரு தனி நபராகவோ ஒரு மக்கள் குழுவினராகவோ இருக்கலாம். மனித சமுதாயத்திற்கு சிந்தனைச் சுதந்திரத்தையும் சிறப்பு அந்தஸ்தையும் கொடுப்பதற்காக, அதனை பல தெய்வக்கொள்கையிலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன், மஸ்ஜிதுகள் நிறுவப்படுகின்றன. இவ்வாறு நிறுவப்பட்டு ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்குப் பின் பாபரி மஸ்ஜித் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி ஹிந்துத்துவ வெறியர்களால் இடிக்கப்பட்டது. பாபரி மஸ்ஜிதை புனர் நிர்மாணம் செய்வதற்கு நீங்களும் பல்வேறு வழிகளில் பணியாற்றலாம்! Continue reading →
Posted in நிகழ்வுகள்
|
Tagged பாபரி
|